வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு ரிஷப் பண்ட் செய்த நன்றி கடன்.. யாருனே தெரியாம உதவிய சகோதரர்கள்

இந்திய அணியில் நட்சத்திர வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட் வெறும் 27 வயதான அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிய விபத்தில் சிக்கிக்கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்திய அணியில் விளையாடாமல் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். விபத்தில் மாட்டிக்கொண்ட கார் நவீன வசதிகளுடன் இருந்ததால் இவர் காப்பாற்றப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டவர் ரிஷப் பண்ட். தற்போது இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டி தொடர்களிலும் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.தற்போது வரை இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லி டெகரா டென்னில் ரிஷப் பந்துக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் இவரது கார் ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சுமார் 200 மீட்டர் இழுத்துச் சென்று நெருப்புக்கு இறையானது. பென்ஸ் வகை கார் என்பதால் தற்காப்பு கவசங்கள் இருந்ததால் இவர் உயிர்த்தப்பினார்.

இருந்தாலும் இவருக்கு முட்டி உடைந்து பின்னந்தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அப்பொழுது அங்கே வந்த இருவர் கார் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்தை பத்திரமாக வெளியே இழுத்து காப்பாற்றினார்கள். அருகில் உள்ள சாசம் மருத்துவமனையிலும் அவரை அனுமதித்தனர். சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்திலிருந்து ரிஷப் பண்தை காப்பாற்றியது ரஜித்குமார் மற்றும் நீசி குமார் என்பவர்கள் தான் என்பதை சுயநினைவு வந்தவுடன் அறிந்து கொண்டார் ரிஷப் பண்ட். அவர்கள் இருவரும் அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருபவர்கள் என்பதையும் தெரிந்து கொண்டார். இப்பொழுது தன் உயிரை காப்பாற்றிய அவர்கள் இருவருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பரிசளித்துள்ளார்.

Trending News