ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தட்டு தடுமாறி உயிர் பிழைத்த ரோபோ சங்கர்.. ரஜினி, கமலுடன் கொண்டாடிய 22-வது திருமண புகைப்படம்

Robo Shankar-Rajini-Kamal: ரோபோ சங்கர் சமீபத்தில் உடல் நலக்குறைவின் காரணமாக ரொம்பவும் அவதிப்பட்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர் புத்துணர்வோடு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்.

22-வது திருமண புகைப்படம்

robo sankar-rajini
robo sankar-rajini

அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படம் பயங்கர வைரலாகி வருகிறது. அதாவது தற்போது 22 ஆவது திருமண நாளை கொண்டாடி இருக்கும் அவர் இரு ஜாம்பவான்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்.

Also read: 4 முறை சிவாஜியை வென்ற ரஜினிகாந்த்.. இன்றுவரை மாஸ் காட்டும் பில்லா

அதன்படி ரஜினி, கமல் இருவரையும் ரோபோ சங்கர் மனைவியுடன் சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அதைத்தான் இப்போது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது உலகநாயகன் போன் செய்து அன்புடன் விசாரித்து இருந்தார்.

தலைவருடன் ரோபோ சங்கர்

robo-sankar
robo-sankar

அதை அடுத்து இப்போது அவரிடம் இருந்து ரோபோ சங்கர் திருமண வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறார். அத்துடன் தலைவரையும் சந்தித்து அவர் ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். அவருக்கு ரசிகர்களும் இப்போது தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் உடல்நல குறைவிற்கு பிறகு உடற்பயிற்சியில் ரோபோ சங்கர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

Also read: ரஜினி, கமல் தான் இத பண்ணுவாங்களா.? பேராசையில் அஜித்தை தூதுவிடப் போகும் விஜய்

அவருடன் இணைந்து அவரின் மனைவி, மகளும் கூட உடற்பயிற்சி செய்து வருகின்றனர். அதில் ரோபோ ஷங்கரின் மனைவி பாதிக்கு மேல் உடல் எடையை குறைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இப்படி சிறந்த ரோல் மாடலாக இருக்கும் இந்த தம்பதிகளுக்கு எங்கள் சார்பாகவும் திருமண நல்வாழ்த்துக்கள்.

கமலுடன் ரோபோ சங்கர்

robo-sankar-kamal
robo-sankar-kamal

Trending News