புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தூங்கிய டிராவிட்டை வம்பிழுத்த ரோகித் சர்மா.. விட்ட மொத்த ஜொள்லால் மூழ்கிய விமானம்

இந்தியா 20 ஓவர் உலகக் கோப்பையை வாங்கிய உற்சாக மிகுதியில் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த பொழுது, நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊழியர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா கோப்பையை வென்றது.

வெஸ்ட் இண்டீஸ்இல் இருந்து இந்தியா நாடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் பார்படாஸ் மாநகரத்தில் புயல் உருவாகி, இந்தியா திரும்பவுள்ள விமானங்கள் அனைத்தும் ரத்தானது. அதனால் இந்தியா மேற்கிந்திய தீவுகளில் மேலும் இரண்டு நாட்கள் தங்கும் சூழ்நிலை உருவாகியது.

அதன் பின்னர் இந்திய அணியின் பிசிசிஐ நிர்வாகி ஜெய் ஷா இந்தியாவிற்காக தனி விமானம் ஏற்பாடு செய்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு போட்டிகளுக்காக சென்ற அனைத்து ஊழியர்களையும் இந்தியாவிற்கு கூட்டி வந்தார். அப்பொழுது பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் விமானத்தில் நிகழ்ந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் இருந்து டெல்லி வருவதற்கு சுமார் 16 மணி நேரம் ஆகுமாம். உற்சாக மிகுதியில் இந்திய வீரர்கள் யாரும் தூங்கவில்லையாம், ஆனால் ராகுல் டிராவிட்டுக்கு தூக்கம் வந்ததால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊழியர்கள் இருக்கையில் வந்து தூங்கி விட்டாராம்.

விட்ட மொத்த ஜொள்லால் மூழ்கிய விமானம்

இதனால் அவரை கலாய்க்கும் விதமாக ரோகித் சர்மா ஊழியர்கள் இடத்திற்கு வந்து வீரர்களை திட்டுவது போல் ராகுல் டிராவிட் திட்டி காமெடி செய்துள்ளார். பின்னர் டிராவிட் எழுந்தவுடன் செல்லமாக ரோகித்திற்கு இரண்டு அடி போட்டிருக்கிறார்.

ரிஷப் பந்த், ரோகித் சர்மா, சிவம் துபே, சுபம் கில் போன்ற வீரர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் இடத்திற்கு வந்து ஊழியர்களிடம் விட்ட ஜொள்ளில் ஒட்டுமொத்த விமானமுமே நிரம்பி வழிந்தது என வேடிக்கையாக பதிவிட்திருந்தனர.

Trending News