ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மோசமான கெட்ட வார்த்தை பேசிய ரோகித் சர்மா.. ஒரு செகண்ட் விராட் கோலியையே மிஞ்சி விட்டார்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும், இந்திய அணிக்கும் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில், வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 44வதுஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

சரியான நேரத்தில், பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடி கொடுத்தார் கேப்டன் ரோகித் சர்மா.

சர்மாவின் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதேபோல் நடுவர்கள் 2 முறை தவறான அவுட் வழங்கிய போதும், ரோகித் சர்மா நடுவரிடம் ரிவியூ செய்து மாற்றினார்.

இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா, ஃபில்டிங்கில் சொதப்பியது ரோகித் சர்மாவிற்கு கடும் கோபத்தை வரவழைத்தது. ஒரு முறை கைக்கு வந்த பாலை தடுக்க பிரஷித் கிருஷ்ணா தவறவிட்டார். இதனால் அது பவுண்டரிக்கு சென்றது.  அப்போதும் கூட ரோகித் சர்மா பொறுமையாக இருந்தார்.

அதுமட்டுமின்றி ஒரு பந்தை பிடிக்க தவறிய அவர் அதை சிக்ஸராகவும் மாற்றினார். இதனால் கடுப்பான ரோஹித் சர்மா எல்லைமீறி அசிங்கமான கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டார். டென்ஷன் என்றால் இப்படித்தான் இருக்கும் போல. இதற்கு முன்னால் நாம் விராட் கோலியை தான் இப்படி கோபப்பட்டு பார்த்திருக்கிறோம்.

Trending News