சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் அவ்வளவு விசேஷமாக இல்லை. தொடர் தோல்விகளால் பிசிசிஐ இந்திய அணி மீது உச்சகட்ட கடுப்பில் இருந்து வருகிறது. அதனால் இந்திய அணியில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டம் போட்டும் வருகிறது.
இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒயிட் வாஸ் தோல்வி மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் படுதோல்வி என இந்திய அணி பல இன்னல்களை சந்தித்து வருகிறது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இந்திய அணி அடுத்தடுத்த பல தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக T20 போட்டியில் விளையாட உள்ளது. அதுவும் போக சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது.
பிசிசிஐ இந்த இரண்டு தொடர்களிலும் ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருப்பார் என தெரிவித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்படும் எனவும் திட்ட வட்டமாக கூறியுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் அணி இந்தியாவை விட நாங்கள் தான் பலமாக இருக்கிறோம். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை எளிதாக வீழ்த்துவோம். ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் அணியில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது என அந்த அணியின் வீரரான முகமது அமீர் அனாவசியமாக பேசி வருகிறார்.