Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Rolex!  ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கப்போகும் சூர்யா.. வெளியான வேற லெவல் அப்டேட்

Rolex! ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கப்போகும் சூர்யா.. வெளியான வேற லெவல் அப்டேட்

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. சூர்யா நடிப்பில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படமாக இருப்பதால் கங்குவாவுக்கு ரசிகர்கள் […]

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. சூர்யா நடிப்பில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படமாக இருப்பதால் கங்குவாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இசை வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து, படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கங்குவா படம் பான் இந்தியா அளவில் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.  சூர்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்தார்.

Rolex! தனி sequel

இது தொடர்பாக அவர் கூறியதாவது,”ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தின் ஷூட்டிங் வெறும் அரை நாள் நடந்தது. அது தினத்தில், காலை நேரத்தில் தான் எனக்கு சீன் பேப்பர் கிடைத்தது.

20 ஆண்டுகளாக படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் எடுக்கவில்லை. ஆனால் ரோலக்ஸ் ஒரு கெட்டவனாக இருப்பதால், என் விதிமுறைகளைத் தாண்டி நடித்தேன். கமல் சார் வரும் முன் முடித்துவிட வேண்டும் என்று எண்ணினேன், அவரின் முன்னிலையில் நடிக்க முடியாது.”

“அதுமட்டுமின்றி கைதி 2 படத்தில் என் தம்பி-க்கு வில்லனாக rolex கதாபாத்திரத்தில் நிச்சயமா வருவேன்.  rolex படம் ஒன்றும் தனி sequel ஆக உருவாகப்போகிறது.  அதிலும் நடிப்பேன்” என்று வேற லெவல் அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார். 

ரசிகர்கள் இதை கேட்டு உற்சாகத்தில் திக்குமுக்காடியுள்ளனர்.  இந்த நிலையில், ரசிகர்கள் “லோகின்னா சீக்கிரம் கூலிய முடிச்சு விடுன்னா.. கைதி 2 ஸ்டார்ட் பண்ணுங்க” என்று  கமெண்ட் செய்து வருகின்றனர். 

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.