லியோவை மிரட்ட போகும் ரோலக்ஸ்.. சூர்யா 42-வின் வாயை பிளக்க வைக்கும் ப்ரீ ரிலீஸ் வசூல் ரிப்போர்ட்

நடிகர் சூர்யா சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பின்பு தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அப்படி இவரது நடிப்பில் கடந்தாண்டு திரையில் வெற்றிகரகமாக ஓடிய படம் தான் விக்ரம். உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படத்தில் சூர்யா கடைசி 10 நிமிடங்கள் திரையில் தோன்றி ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரள வைத்திருப்பார்.

அந்த கதாபாத்திரம் சூர்யாவின் கேரியருக்கே முக்கியமாக அமைந்துள்ளது. மேலும் தற்போது லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவெர்சில் உருவாகி கொண்டிருக்கும் லியோ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் ரோலக்ஸின் கதாபாத்திரம் கட்டாயம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், லியோ படத்துக்கே டப் கொடுக்கும் வகையில் சூர்யாவின் 42 வது படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூல் வெளியாகி வாயைப் பிளக்க வைத்துள்ளது.

Also Read: கமல், சூர்யா லியோ படத்தில் நடிப்பார்களா?. விஜய் போட்ட கண்டிஷனால் குழம்பி போன லோகேஷ்

ஏற்கனவே விஜய்யின் லியோ படம் டைட்டில் வெளியாவதற்கு முன்பாகவே 500 கோடி வரை ப்ரீ ரிலீஸ் வசூலானது என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சூர்யா42 திரைப்படத்தின் டைட்டில் வருவதற்கு முன்பே இப்படம் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூலுக்கு நிகராக உள்ளது. லியோ படத்தின் ஓடிடி விற்பனை 150 கோடியாகவும், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் 240 கோடியாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்கு உரிமம் மட்டும் 175 கோடிக்கு லியோ படம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூலை போல சூர்யா42 திரைப்படத்தின் வசூல் உள்ளது. சூர்யா 42 படம் வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகும் நிலையில், இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சூர்யாவின் நடிப்பில் வரலாற்று படமாக வெளியான 7ஆம் அறிவு படத்திற்கு பின்பு, சூர்யா நடித்துக்கொண்டிருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Also Read: பாரதிராஜா நடிப்பிலும் ஜொலித்த 6 படங்கள்.. வில்லனாக நடித்து சூர்யாவை மிரட்டிய இயக்குனர் இமயம்

அண்மையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் உருவாகுகிறது. இதனிடையே அண்மையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூலாக கிட்டத்தட்ட 500 கோடி வரை வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வசூல் எண்ணிக்கை வைரலாகி வரும் நிலையில், லியோ படத்துடன் இப்படம் வரும் அக்டோபரில் போட்டி போடும் எனவும் தெரிவிக்கப்பட்டது வருகிறது. மேலும் விஜய்யின் லியோ படத்திற்கு போட்டியாக சூர்யாவின் சூர்யா42 படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பில் சூர்யாவின் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

Also Read: அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய 9 பான் இந்தியா படங்கள்.. லியோ உடன் போட்டி போடும் சூர்யா