வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

2 வருஷத்துக்கு இந்த பக்கமே வரக்கூடாதுன்னு எஸ்.ஜே சூர்யா போடும் ஆர்டர்.. கைவசம் இவ்வளவு படங்களா.!

S.J Surya Lineup Movies: இப்போது ரொம்ப பிசியாக இருக்கும் நடிகர் யார் என்று கேட்டால் எஸ் ஜே சூர்யா என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து தள்ளிக் கொண்டிருக்கிறார்.

ஹீரோயின் இல்லாமல் கூட படம் வரும் ஆனால் இவர் இல்லாமல் வராது என்ற நிலை தான் இப்போது இருக்கிறது. அந்த அளவுக்கு டாப் ஹீரோக்கள் அனைவரும் நடிப்பு அரக்கனுக்கு ஸ்கெட்ச் போட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இவர் கையில் இருக்கும் 6 படங்கள் பற்றிய விவரங்களை இங்கு காண்போம்.

அதில் முதலாவதாக உலக நாயகனுடன் இவர் இணைந்து நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் 3 மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதை அடுத்து தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகி இருக்கும் ராயன் படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

Also read: புது கூட்டணியில் விக்ரம்.. முதன்முதலாக மாஸ் வில்லனுடன் இணையும் சியான்

சமீபத்தில் இது பற்றிய அறிவிப்பை ஒரு போஸ்டர் உடன் தயாரிப்பு தரப்பு வெளியிட்டு இருந்தது. மூன்றாவதாக விக்னேஷ் சிவன், பிரதீப் கூட்டணியின் LIC படத்திலும் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். அடுத்ததாக விக்ரமின் சீயான் 62 படத்தில் இவர் இணைந்துள்ளார்.

இந்த இரண்டு நடிப்பு அரக்கர்களும் எந்த அளவுக்கு திரையில் மிரட்ட போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களுக்கு இருக்கிறது. அடுத்ததாக கவின் 6 படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படி ரவுண்டு கட்டி நடித்து வரும் இவர் கில்லர் என்ற படத்தை இயக்குவதிலும் மும்முரம் காட்டி வருகிறார். கடந்த வருடமே இது பற்றிய தகவல் வெளிவந்த நிலையில் அவரை இயக்குனராக பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Also read: எஸ் ஜே சூர்யாவுக்கு வரிசை கட்டி இருக்கும் 5 படங்கள்.. தனுஷ்டன் மோத போகும் நடிப்பு அரக்கன்

Trending News