சென்ற வாரம் ஆஸ்திரேலியா நாட்டையே உலுக்கும் விதமாக அமைந்தது ஷேன் வார்னே மரணம். மொத்த நாடுமே அவருக்காக இன்றுவரை கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கிறது.
ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள அவரது வீட்டில் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் நெஞ்சுவலி காரணமாக இறந்ததாக அறிவித்தனர்.
வார்னே தன்னுடைய 52வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். இந்நிலையில் வார்னே உயிருடன் இருக்கும் போது, அவரை பற்றி அமேசான் ப்ரைம் ஒரு டாக்குமெண்டரியை தயாரித்தது.
அந்த டாக்குமென்டரில் வார்னேவின் நெருங்கிய நண்பரான சச்சின் டெண்டுல்கர் பேட்டியும் இடம் பெற்றிருந்தது. அதில் ஒரு முறை வார்னே மும்பைக்கு வந்தபோது சச்சின் டெண்டுல்கர் அவரை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார்.
வீட்டிற்கு விருந்துக்கு வந்த வார்னேவிற்கு, அசைவ உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார் டெண்டுல்கர். ஆனால் வார்னே அதை எல்லாம் சாப்பிடாமல், சாப்பிட்டது போல் நடித்துள்ளார்.
பின் சச்சின் வீட்டின் அடுப்பாங்கரக்கு சென்ற வார்னே, அவரே ஒரு சாண்ட்வெஜ் சமைத்து சாப்பிட்டுள்ளார். இதனை அந்த டாக்குமெண்டரியில் டெண்டுல்கர், நான் சமைத்த உணவு அவருக்கு காரமாக இருந்திருக்கிறது அதனால் சாப்பிடுவது போல் நடித்துவிட்டு சாண்ட்வெஜ் சாப்பிட்டுவிட்டு ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.