வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வாலை ஓட்ட நறுக்கி சச்சின் விரட்டி அடித்த 3 பேர்.. எழுதிக் கொடுத்து சொன்னதை செஞ்ச கடவுள்

சச்சின் டெண்டுல்கர் இவரை பார்த்து கிரிக்கெட் பார்க்கவும், விளையாடவும் ஆரம்பித்தவர்கள் பல பேர். இவருக்கு முன்பு மாஸ்டர் பிளாஸ்டர் சுனில் கவாஸ்கர், அவருக்கு பின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், இவர்கள் இரண்டு பேரையும் மிஞ்ச இன்று வரை கிரிக்கெட்டில் எவருமில்லை என்று கூறலாம்.

சச்சின் டெண்டுல்கர் எப்பொழுதுமே எதிர் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். ஒரு காலத்தில் இவர் விக்கெட்டை எடுத்து விட்டால் இந்திய அணி முழுவதும் சரிந்து விடும். அப்படி இவரை கரம் வைத்து அவுட் ஆக்குவதற்கு பல பவுலர்கள் கங்கணம் கட்டி திரிந்தனர். ஆனால் எல்லோரையும் சமாளித்து விரட்டியடித்தார் இந்த காட் ஆப் கிரிக்கெட்.

அப்படி சச்சின் டெண்டுல்கரிடம் வாலாட்டிய மூன்று பேரை விரட்டி அடித்துள்ளார். அவர்களும் தங்களுடைய தோல்வியையும், இயலாமையும் ஒத்துக் கொண்டுள்ளனர். பின்னர் கிரிக்கெட் ஒரு மதம் என்றால், அதில் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தான் என்று புகழாரம் கொடுத்து சென்றனர். அப்படி சச்சினிடம் வாலாட்டிய மூன்று பேர்

ஹென்றி ஓலாங்கா: ஜிம்பாவே அணியின் வேகப்பந்துவீச்சாளரான இவர் ஒரு முறை சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை எடுத்துவிட்டு வானுக்கும், பூமிக்கும் குதித்து மொத்த ரசிகர்களையும் முகம் சுளிக்க செய்தார். அதற்கு அடுத்த போட்டியில் டெண்டுல்கர் அவர் பந்துகளை பௌண்டரியும், சிக்ஸ்ருமாக பறக்கவிட்டு வின் சர்வத்தையும் அடக்கி விட்டார்.

olonka
olonka

சேன் வார்னே: சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான, சேன் வார்னே சச்சினின் விக்கெட்டை எப்பொழுதுமே நான் தான் எடுப்பேன் என்று அவர் அணியிடம் சவால் விடுவாராம் .அப்படி பலமுறை ஆஸ்திரேலியா அணிக்காக இவர், அவரது விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இருக்கிறார். இது சச்சினுக்கு தெரிய வரவே அவர் பந்துகளை டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு நாள் போட்டி போல் அடித்து விளாசி அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Warne
Warne

பிராட் ஹாக்: இவர் ஒரு முறை டெண்டுல்கரின் விக்கெட்டை எடுக்கவே அது ஆஸ்திரேலியா நாட்டின் நாளிதழில் வந்துள்ளது. அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு சச்சினிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கியுள்ளார் பிராட் ஹாக். அந்த பேப்பரில் சச்சின் டெண்டுல்கர் இது இன்னொரு முறை நடக்காது என்று எழுதிக் கொடுத்து கையெழுத்திட்டுள்ளார். அதற்கு அடுத்த 45 போட்டிகளில் பிராட் ஹாக் வீசிய பந்துகளில் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவே இல்லை இந்த காட் ஆப் கிரிக்கெட்.

Bradd
Bradd

Trending News