ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

உயிர் நண்பனை நடுத்தெருவில் விட்ட சச்சின்.. வேலை கேட்டு எம்சிஏ-விடம் கெஞ்சிய பரிதாபம்

கிரிக்கெட் என்றவுடனே பெரும்பாலானோருக்கு சட்டென்று ஞாபகம் வருவது சச்சின் டெண்டுல்கர் தான். தனது 22 கால வாழ்க்கையை கிரிக்கெட்டுக்காக சச்சின் அர்ப்பணித்துள்ளார். இவர் எண்ணற்ற சாதனைகள் புரிந்துள்ளார்.

இந்நிலையில் சச்சினின் உயிர் நண்பன் தற்போது மிகுந்த பண கஷ்டத்தில் உள்ளார். இவ்வாறு அவர் வறுமையில் வாடுவது சச்சினுக்கு தெரிந்தும் உதவாதது மிகப்பெரிய அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி.

Also Read :கிரிக்கெட் விளையாட்டில் சுவாரசியமாக நடந்த ஆச்சரியங்கள்.. அடக்கடவுளே! இப்படியெல்லாம் கூட நடக்குமா?

இவர் இந்திய அணிக்காக 104 ஒருநாள் ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளை விளையாடி உள்ளார். தற்போது வினோத் காம்ப்ளி 50 வயதை எட்டியுள்ள நிலையில் வறுமையால் மிகுந்த கஷ்டப்பட்ட வருவதாக கூறியுள்ளார். அதாவது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் மாதம்தோறும் வரும் 30 ஆயிரம் பென்ஷன் மட்டும் கிடைக்கிறது.

இதனால் என் குடும்பத்தின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்துள்ளது. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவது கூட மிக சிரமமாக உள்ளது. இது எனது பால்ய கால நண்பர் சச்சினுக்கும் தெரியும். ஆனால் அவரிடம் இருந்து எந்த ஒரு உதவியையும் தான் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

Also Read :பிறந்தநாளை சாதனை நாளாக மாற்றிய 5 கிரிக்கெட் வீரர்கள்.. அதிலும் இவரின் சாதனை நம்ப முடியாத ஒன்று!

மேலும் டெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியில் வேலை கொடுத்து உதவினார். தற்போது இளம் வீரர்களுடன் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். கிரிக்கெட் தான் எனக்கு எல்லாமே, இங்கு எனக்கு ஏதாவது வேலை கொடுக்கும்படி எம்சிஏ-விடம் வினோத் காம்ப்ளி கோரிக்கை வைத்துள்ளார்.

சச்சினை விட பெரிய ஆளாக வரவேண்டிய வினோத் காம்ப்ளி சிலரது சூழ்ச்சியால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார். தற்போது இவர் வறுமையில் வாடும் செய்தி இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது. இது சச்சினின் காதிற்கு சென்றால் கண்டிப்பாக தனது உயிர் நண்பனுக்கு எல்லா உதவியும் செய்வார் என எதிர்பார்க்கலாம்.

Also Read :அதிகமுறை 300 பந்துகளுக்கு மேல் சந்தித்த 5 டெஸ்ட் வீரர்கள்.. ராகுல் டிராவிட்டுக்கே சவாலா?

Trending News