புதன்கிழமை, நவம்பர் 27, 2024

சோகங்கள் மட்டுமே அடங்கிய ஸ்ரீதேவி வாழ்க்கையின் மறுபக்கங்கள்.. நம்பிய நண்பர்கள் கூட கழுத்தறுத்த துரோகம்

நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமாவிலும் சரி வட இந்திய சினிமாவிலும் சரி இவர் பெயர் தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு தமிழகத்தில் பிறந்து பாலிவுட் வரை கொடி கட்டிப் பறந்த ஒரு நடிகை என்றால் அது ஸ்ரீதேவி தான். அவர்களின் திரை வாழ்வில் அவர்கள் அடைந்த வெற்றிகள் ஒன்று இரண்டல்ல. நிறைய படங்களில் மிக வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து பல விருதுகளையும் வென்றவர்.

1976ஆம் ஆண்டு கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் மூன்று முடிச்சு திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற உச்ச நட்சத்திரங்களோடு நடித்து அன்று இருந்த முன்னணி கதாநாயகிகளின் மார்க்கெட்டுகளை உடைத்தவர் நடிகை ஸ்ரீதேவி.

இப்படி பல உச்சங்களைத் தொட்ட ஸ்ரீதேவியின் நிஜ வாழ்க்கை அவ்வளவு அருமையாக இருக்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு கணமும் தாளாத சோகத்தை மட்டுமே பார்த்து இருக்கிறார் இவர். அவரைபற்றி தெரியாத, ரசிகர்கள் பார்க்காத மற்றொரு முகமும் இருக்கிறது.

ஸ்ரீதேவி சிறுவயதிலிருந்து அப்பா செல்லமாக வளர்ந்து இருக்கிறார். அப்பாவின் அரவணைப்பில் அனைத்தையும் மறந்து அப்பாவின் செல்லப் பிள்ளையாக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட தந்தை இறக்கும்வரை ஸ்ரீதேவி சுதந்திர புறாவாக சிறகடித்து பறந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்ட தந்தை இறந்தவுடன் அவருடைய வாழ்வு அப்படியே புரட்டிப் போடப்பட்டது. அதன்பின் அவர் வாழ்க்கையில் சிரிப்பிற்கு இடமில்லாமல் போனது.

மேலும் தனது தந்தையின் நண்பர்களை நம்பி பல கோடி ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்தும் இருக்கிறார். இப்படி பல சிக்கல்களில் மன உளைச்சலில் எப்போதும் இருப்பதால், அவர் யாரையும் பெரிதாக சந்திப்பதும் இல்லையாம். இறுதியாக தன் அம்மா வாங்கிய கடனுக்காக தனது சொத்துக்களையும் விற்று கடனை தீர்த்து இருக்கிறார்.

அப்படி வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து நின்ற ஸ்ரீதேவிக்கு உறுதுணையாக நின்று தோள் கொடுத்தவர் இன்றைய முன்னணி சினிமா தயாரிப்பாளராக இருக்கக்கூடிய போனிகபூர் தான்.

சரி வாழ்க்கை மாறிவிட்டது இனிமேலாவது நிம்மதியாக வாழலாம் என்று ஆசைப்பட்ட ஸ்ரீதேவிக்கு அந்த வாழ்வும் நிம்மதி தரவில்லை . போனி கபூரின் தாய் ஸ்ரீதேவியை தனது குடும்பத்தை அழிக்க வந்த ஒரு மூதேவி என்று ஒவ்வொரு நாளும் ஸ்ரீதேவியை வசை பாடுவாராம். ஒரு கட்டத்தில் உச்சமாக சென்று ஸ்ரீதேவியை பொதுவெளியில் தாக்கி கூட இருக்கிறார்.

என்னதான் இந்திய சினிமாவையே தன் கைக்குள் போட்டுக்கொண்டு வெற்றி நடிகையாக வலம் வந்தாலும், தனது சொந்த வாழ்க்கையில் அவரால் நிம்மதியாக இறுதிவரை வாழ முடியவில்லை. ஆனால், அவர் இறக்கும்வரை 300 படங்கள் நடித்து முடித்திருக்கிறார். அவர் நடித்த கடைசி படம்தான் அவரது 300வது படமாக அவருக்கு அமைந்திருந்தது.

இறுதிவரை சோகத்தை மட்டுமே தன்னுடைய வாழ்க்கையில் அதிகமாக பார்த்த ஸ்ரீதேவி இறக்கும் போதும் கூட தன்னுடைய இறப்பிற்கான காரணம் என்ன என்று தெரியாத மர்ம புதிராகவே இறந்துவிட்டார். அவருடைய பிறப்பில் ஆரம்பித்து இறப்புவரை ஸ்ரீதேவி அடைந்த துன்பங்கள் ஏராளம். திரையில் காண்பது எல்லாம் வெறும் கற்பனை கதாபாத்திரம் தான்

- Advertisement -spot_img

Trending News