வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

இத பண்ணமாட்டேன்னு எழுதி கொடுங்க.. அப்போ தான் நடிப்பேன்.. கட் அண்ட் ரைட் ஆக பேசிய சாய் பல்லவி

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ வீரராக நடித்திருக்கும் அமரன் படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நாளை மறுநாள் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவியாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி.

இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.  முக்கியமாக சாய் பல்லவி வரும் காட்சிகள் அவ்வளவு அழகாக உள்ளது.  கதைக்கு அழகு சேர்க்கும் விதமாகவும், காதலை நமக்குள் உணரவைக்கும் விதமாகவும் அருமையாக நடித்துள்ளார் சாய் பல்லவி.

இந்த படத்தை இதுவரை பார்த்த எல்லோரும் கண்கலங்கியபடி தான் தியேட்டர் விட்டு வெளியே வந்தனர்.  ஆகமொத்தத்தில் இந்த தீபாவளி மனதை உருக்கும் தீபாவளியாக தான் இருக்கப்போகிறது.  இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் படுபயங்கரமாக நடந்து வருகிறது.  சாய் பல்லவி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

எழுதி கையெழுத்து போட்டு கொடுங்க..

அமரன் படத்தில் இந்து கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தயங்கியிருக்கிறார். தன் தயக்கத்தை அவர் ராஜ்குமார் பெரியசாமியிடம் சொல்ல அவரோ நீங்கள் இந்துவை சந்தித்து பேசிவிட்டு வந்து ஸ்க்ரிப்ட்டை மீண்டும் படிக்கவும் என கூறியிருக்கிறார்.

மறைந்த மேஜர் முகுந்தின் மனைவி இந்துவை பார்த்ததும் இம்பிரஸாகி நான் அமரன் படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என ராஜ்குமார் பெரியசாமியிடம் கூறியிருக்கிறார் சாய் பல்லவி. ஆனால் கூடவே கறாராக ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் சாய் பல்லவி.

“பயோபிக், அதுவும் ஹீரோவை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் நீளமாக இருக்கிறது என்று நினைத்தால் ஹீரோயின் வரும் காட்சிகளை தான் வெட்டித் தூக்கிப் போட்டுவிடுவார்கள். என் கதாபாத்திரத்தை அப்படி செய்ய மாட்டேன் என எழுதிக் கொடுங்கள்.  நான் நடிக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார். 

உங்கள் கதாபாத்திரமான இந்து ரெபகா வர்கீஸ் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரம் போன்றே முக்கியமானது என கூறியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.  சாய் பல்லவி சொன்னபடி கையெழுத்து போட்டு கொடுத்த பின்பு தான் சாய் பல்லவி நடித்திருக்கிறார். 

சாய் பல்லவி-க்கு என்று பெருமளவு fan base உள்ளது.  இந்த படத்தின் மூலமும், தற்போது அவர் கொடுத்து வரும் பேட்டிகள் மூலமாகவும் அவருடைய ஸ்டாண்டர்ட்ஸ் பல மடங்கு உயர்ந்துள்ளது.  இதன் மூலம் இவரை பிடிக்காதவர் என்று யாருமே இருக்கமுடியாது என்று தான் தோன்றுகிறது. 

- Advertisement -spot_img

Trending News