பங்களாதேஷ் அணி 20 ஓவர் உலக கோப்பை தொடர் விளையாடுவதற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் உலகக் கோப்பை நடக்கும் இடமான அமெரிக்கா சென்று அந்த நாட்டு அணியுடன் 3 டி20 போட்டி தொடர் விளையாடி வருகிறது. அங்கே பட்ட அடியால் துவண்டு போய் உள்ளது பங்களாதேஷ் அணி.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது பங்களாதேஷ் அணி. முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில். ஆறு ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது அமெரிக்கா அணி.
20 ஓவர் கோப்பைக்கு தயாராகும் நிலையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியிலேயே தோல்வியை சந்தித்ததன் மூலம் பங்களாதேஷ் அணிக்கு இது ஒரு பெரும் அடியாக அமைந்துள்ளது. அது மட்டும் இன்றி அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் பங்களாதேஷ் அணி மீது கடும் வெறுப்பில் உள்ளது. உலகக்கோப்பை போட்டியில் சில வீரர்களை களை எடுக்கவும் காத்துக் கொண்டிருக்கிறது.
ஆட தெரியாதவன் தெரு கோணல்ன்னு சொன்ன கதை
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அணியின் கேப்டன்சாய் அல்ஹாசன், அமெரிக்காவில் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. அது மட்டும் இன்றி சூழ்நிலைகள் மற்றும் ஆடுகளம் வெவ்வேறு மாதிரி இருக்கிறது. அதனால் நாங்கள் இங்கு முற்றிலும் பழக வில்லை இது எங்களுக்கு அபத்தமாக உள்ளது. அதுதான் எங்களது தோல்விக்கு காரணம் எனக் கூறுகிறார்.
விராட் கோலி விளையாடுவதில் ஒரு அக்ரோஷமான வீரர். இவருக்கு நேர் மாறாக சாகிப் அல்ஹசனும். ஆக்ரோஷமான வீரர் என்றால், நன்றாக விளையாடும் வீரர் அல்ல, இவர் மிகவும் அற்பத்தனமாக நடந்து கொள்ளும் ஒரு நேர்மையற்ற வீரர்.
எதற்கெடுத்தாலும் அம்பையரிடம் வம்பு பண்ணுவது, எதிரணி வீரர்களிடம் வம்பு பண்ணுவது இவரின் அன்றாட செயல். இப்பொழுது தோல்வி அடைந்ததும் ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்வது போல் சப்பை கட்டு கட்டுகிறார்.