சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வெளிவந்தது இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளம்.. பிசிசிஐ கான்ட்ராக்ட்டை இழந்த 2 முக்கிய வீரர்கள்

இந்தியாவில் கிரிக்கெட் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் டப்பு தான். அவர்கள் வாழும் ஆடம்பர வாழ்க்கைக்கு இது தான் காரணம். கோடிகளில் புரளும் இந்திய வீரர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ராஜ வாழ்க்கை என்பார்களே அது இதுதான் கோடிகளில் சம்பளம், வெளிநாட்டு பயணம், ஆடம்பர வாழ்க்கை என அனைத்து சௌகரியங்களும் இங்கு ஏராளம்.

திறமையின் அடிப்படையில் நான்கு வகையில் வீரர்கள் வாங்கும் சம்பளத்தை பிரித்துள்ளார்கள். ஏ பிளஸ், ஏ, பி, சி என வீரர்களை பிரித்து சம்பளம் வழங்குகின்றனர்.

1.ஏ ப்ளஸ் வீரர்கள்: இந்தத் தரவரிசையில் விராட் கோலி, கேப்டன் ரோஹித் ஷர்மா, மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வாங்கும் சம்பளம் ஆண்டுக்கு 7 கோடிகள்.

2.ஏ கிரேடு வீரர்கள்: ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது ஷமி, அஸ்வின், மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த ஏ கிரேடு லிஸ்டில் வருகிறார்கள். இவர்களது ஆண்டு வருமானம் 5 கோடிகள்.

3.பி கிரேடு வீரர்கள்: இந்த கிரேட் வீரர்களின் சம்பளம் ஆண்டுக்கு 3 கோடிகள். இந்த லிஸ்டில் ரஹானே, புஜாரா, தாகூர், ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் பட்டேல், முகமது சிராஜ் மற்றும் இஷாந்த் ஷர்மா.

4. சி கிரேடு வீரர்கள்: புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், சஹால், ஹனும விஹாரி, சூர்யகுமார் யாதவ் மயங்க் அகர்வால், ஷிகார் தவான், உமேஷ் யாதவ், இந்த சி கிரேடு பட்டியலில் இணைகிறார்கள். இவர்களது ஆண்டு வருமானம் 1 கோடி.

வீரர்கள் திறமையை நிரூபித்து கிரேடுகள் முன்னேறினாலும், நவ்தீப் சைனி மற்றும் குல்தீப் யாதவ் பிசிசிஐ காண்ட்ராக்ட்டை இழந்துள்ளனர்.

Trending News