புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்தியன் 2 பார்த்து மன உளைச்சலா.? 20% தள்ளுபடி கொடுத்த சலூன், ஆண்டவரை துரத்தி அடிக்கும் கர்மா

Indian 2: இந்தியன் 2 இந்த அளவுக்கு சோசியல் மீடியாவில் கலாய்க்கப்படும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் கூட இப்படி ஒரு டிவிஸ்டை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

அந்த அளவுக்கு நாம் 90 காலகட்டத்தில் பார்த்து ரசித்த இந்தியன் தாத்தாவை இன்றைய 2k கிட்ஸ் கலாய்த்து தள்ளி வருகின்றனர். மாஸா இருந்த எங்க தாத்தாவை இப்படி தமாஸ் பண்ணிட்டீங்களே என நெட்டிசன்கள் புலம்பாத குறை தான்.

இதில் தற்போது ஒரு செய்தியும் வைரலாகி வருகிறது. அதாவது கரூர் மாவட்டம் தாந்தோணி மலையில் இருக்கும் ஸ்டுடியோ 7 ஃபேமிலி சலூன் தற்போது ஒரு அதிர வைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்தியன் 2 படம் பார்த்து உங்களுக்கு மன உளைச்சல் ஆகிவிட்டால் கவலை வேண்டாம். நாங்கள் 20% தள்ளுபடியில் ஹெட் மசாஜ் செய்வோம் என அறிவித்துள்ளனர். மேலும் இந்த ஆஃபரை பெற நீங்கள் இந்தியன் 2 படம் பார்த்த டிக்கெட்டை கையில் எடுத்து வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

indian 2-offer
indian 2-offer

இதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இது என்ன எங்க இந்தியன் தாத்தாவுக்கு வந்த சோதனை என 90 ரசிகர்கள் நொந்து போய் இருக்கின்றனர். மேலும் இது ஆண்டவருடைய கர்மா என ஒரு பிளாஷ்பேக் நிகழ்வும் வைரலாகி வருகிறது.

ஆண்டவரை துரத்தும் கர்மா

அதாவது மறைந்த கலைஞர் விவேக் நடித்த பாலக்காட்டு மாதவன் படம் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்தது. மலேசியாவில் 60 தியேட்டர்களும் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியிட இருந்தனர்.

மேலும் கர்நாடகா, கேரளா போன்றவற்றிலும் உரிமை நல்ல விலைக்கு விற்பனையாகி இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் கமலுடைய பாபநாசம் படம் வெளியாகி அனைத்தையும் புரட்டிப்போட்டு விட்டது.

இத்தனைக்கும் 15 நாட்களுக்குப் பிறகு வெளிவர வேண்டிய படம் தான் அது. ஆனால் பாகுபலி படத்திற்கு பயந்து விவேக் படத்துடன் இப்படம் வெளியாகி இருக்கிறது. விவேக் மற்றும் பட குழுவினர் படத்தை தள்ளி ரிலீஸ் செய்யுங்கள் என கெஞ்சி கதறியும் கூட அவர்கள் ஒப்புக்கொள்ள வில்லையாம்.

விளைவு பாலக்காட்டு மாதவன் படத்திற்கு தியேட்டர்கள் குறைந்தது. அது மட்டுமின்றி கேரளா கர்நாடகா உரிமையும் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை விவேக் சில வருடங்களுக்கு முன்பே ஒரு மேடை நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதைத்தான் ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் தற்போது இந்தியன் 2 படத்தை விட பார்த்திபனின் டீன்ஸ் படத்திற்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதுவும் ஒரு பக்கம் சலசலக்கப்பட்டு வருகிறது. இப்படி இந்தியன் 2 ஒட்டுமொத்த மக்களாலும் கிண்டல் அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் சங்கர் படம் பார்த்த ஃபீல் இல்லையே என்ற கருத்துகளும் கிளம்பியுள்ளது.

இந்தியன் 2 படத்தை கலாய்த்து தள்ளும் 2k கிட்ஸ்

Trending News