ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்த சமந்தா.. பல வருடமாக வாசலில் நின்று புலம்பும் நிலை

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் நானும் ரவுடி தான். தற்போது இதே கூட்டணியில் சமந்தாவும் இணைந்துள்ள படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு முன்பாகவே தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதியும் சமந்தாவும் இணைந்து நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்த காத்துவாக்குல 2 காதல் படத்தில் இரண்டாவது முறையாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் இப்படங்களுக்கு முன்பாகவே விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பு சமந்தாவுக்கு கிடைத்துள்ளது. ஆனால் சமந்தா அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.

சூதுகவ்வும் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தில் விஜய்சேதுபதி நடித்து இருந்தார். அப்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சமந்தாவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் விஜய் சேதுபதிக்கு அப்போது பெரிய அளவில் மார்க்கெட் இல்லை.

மேலும் சில காரணங்களினால் சமந்தா இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பிறகு மடோனா செபாஸ்டின் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமந்தா தற்போது அந்த வாய்ப்பை தவறவிட்டதை நினைத்து வருந்துவதாக கூறியுள்ளார்.

தற்போது சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதியின் காதலியாக கதீஜா பேகம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தென்னிந்திய நடிகைகளில் இரண்டு முன்னணி நடிகைகள் இப்படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News