வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சஞ்சய் தத் செய்வதை பார்த்து வியந்து போன விஜய்.. ஒரு பெரிய மனுஷன் இப்படியா பண்ணுவாரு.!

தளபதி விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கிட்டதட்ட 60% படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இந்த படத்தின் சண்டை காட்சிகள் சென்னையை அடுத்த பனையூரில் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று மீதமிருக்கும் காட்சிகள் சென்னையிலேயே செட் போட்டு ஸ்டூடியோவில் நடக்க இருக்கிறது. மேலும் படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கம்போல லோகேஷ் கனகராஜ் படமாக லியோ மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் கிட்டதட்ட 14 வருடங்களுக்குப் பிறகு நடிகை திரிஷா விஜய்யுடன் இந்த படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

Also Read: லியோ உடன் மோதிப் பார்க்கத் தயாராகும் சஞ்சய் தத்.. இணையத்தை அலறவிடும் ஜிம் புகைப்படம்

இந்த படத்தில் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜ், ஒரு பக்கம் மிஷ்கின், போதாத குறைக்கு மன்சூர் அலிகான் என அவ்வப்போது அதிரடி அப்டேட்களை கொடுத்து லியோ படத்தின் மீதான ஹைப்பை அதிகம் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். அதேபோன்று தற்போது படத்தின் முக்கியமான கேரக்டர் ஒருவரை பற்றியும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லியோ படத்தில் பாலிவுட்டின் முக்கிய நடிகரான சஞ்சய் தத் நடிக்க இருப்பது முன்பே உறுதியாகி இருந்த நிலையில் அவர் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறார் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சஞ்சய் தத் ஏற்கனவே கே ஜி எஃப் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு பரிட்ச்சயம் ஆகிவிட்டார். இருந்தாலும் இவர் தமிழில் எப்படி நடிக்க போகிறார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.

Also Read: விஜய்யுடன் நடிக்க மறுத்த 5 வில்லன்கள்.. மார்க்கெட் போய்டுமோ என்ற பயத்தில் சாக்கு போக்காக சொன்ன காரணங்கள்

ஒரு பெரிய பாலிவுட் ஹீரோ எப்படி தமிழ் படத்தில் நடிப்பார், படப்பிடிப்பில் பழகுவார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து வந்த நிலையில் சஞ்சய் நடந்து கொள்ளும் விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. மதிய உணவு இடைவேளையில் கூட இவர் தன்னுடைய கேரவனுக்கு செல்லாமல் சக நடிகர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறாராம். சில நேரங்களில் உதவி இயக்குனர்களுடன் கூட அமர்ந்து சாப்பிடுகிறாராம்.

இதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த நடிகர் விஜய்க்கு ஒரு பெரிய ஹீரோ எப்படி இவ்வளவு எளிமையாக நடந்து கொள்கிறார் என்று ஆச்சரியப்பட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடமே இதைப்பற்றி சொல்லி இருக்கிறாராம். மேலும் நானும், என்னை போன்ற சக நடிகர்களும் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று பிரமித்து போய் பேசி இருக்கிறார் தளபதி.

Also Read: தளபதி 67-ல் வில்லனாக நடிக்க மறுக்கும் மிஷ்கின்.. காரணம் கேட்டு விழி பிதுங்கிய லோகேஷ்

Trending News