வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஹீரோ ஆன பின் அந்த மனுஷன ஒதுக்கி வைத்த சந்தானம்.. என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை வேடங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகர் சந்தானம். இது எல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வரை தான் சமீபகாலமாக இவர் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் திரைப்படங்களில் கவுண்டர் காமெடிகளுக்கு பெயர் போனவர் சந்தானம். தற்போது அவர் ஹீரோ அவதாரம் எடுத்து விட்டதால் அதுபோன்ற வேடங்களில் நடிப்பதற்கு பல பேர் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் அந்த இடம் வெற்றிடமாக தான் இருக்கிறது.

தனக்கு கிடைத்த காமெடி வேடங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு சந்தானம் இனிமேல் நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று இவ்வளவு அடம்பிடிப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில் சந்தானம் தன்னுடன் இணைந்து நடித்த ஒரு நடிகரை இன்றுவரை ஒதுக்கி வைத்து இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல சந்தானத்துடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி செய்த நடிகர் விடிவி கணேஷ் தான். இவர்கள் இருவரும் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா, வானம் உட்பட பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றனர்.

ஒரு வகையில் அவர் பிரபலம் அடைவதற்கு சந்தானமும் ஒரு காரணம். ஆனால் அவர் ஹீரோவாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவர்கள் இருவரும் இணைந்து எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை என்று பல செய்திகள் வெளிவந்தது.

ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இரு தரப்பினரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஒருவேளை சந்தானம் ஹீரோவாக நடிப்பதால் தான் அவருக்கு வாய்ப்பு தரவில்லையா என்பது உறுதியாக ரசிகர்கள் உட்பட யாருக்கும் தெரியவில்லை.

Trending News