புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

சிம்பு படத்தில் காமெடியனாக ரீ என்ட்ரி கொடுக்கும் சந்தானம்.. இனிமே இப்படி தானாம்

Santhanan: சிம்பு அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க இருக்கிறார். அதில் மணிரத்தினம், கமல் கூட்டணியில் இவர் நடித்துள்ள தக் லைப் ஜூன் மாதம் வெளிவர இருக்கிறது.

அதை அடுத்து தேசிங்கு பெரியசாமி, ராம்குமார், அஸ்வத் மாரிமுத்து என அடுத்தடுத்த ப்ராஜெக்ட் இவர் கைவசம் இருக்கிறது. அதில் தன்னுடைய ஐம்பதாவது படத்தை சிம்புவே தயாரிக்கிறார்.

இதன் அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் தற்போது சிம்பு 49 படத்தில் சந்தானம் காமெடியனாக நடிக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் அதில் அவருக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.

காமெடியனாக ரீ என்ட்ரி கொடுக்கும் சந்தானம்

அதை அடுத்து இந்த வருட தொடக்கத்தில் வெளிவந்த மதகஜராஜா அவருக்கு ஒரு மன மாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதனால் மீண்டும் காமெடியனாக நடிக்க தயாராகிவிட்டார்.

அதன்படி தற்போது சிம்பு ராம்குமார் கூட்டணியில் சந்தானமும் இணைந்துள்ளார். இப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் சாய்பல்லவி அந்த படத்தை உடனே ரிஜெக்ட் செய்து விடுவார். அதன்படி இப்படத்தில் ஒரு அழுத்தமான கேரக்டர் என்பதால் தான் பட குழு தைரியமாக அவரை அணுகி இருக்கின்றனர்.

அந்த வகையில் சிம்பு 49 கூட்டணியில் சந்தானம் சாய் பல்லவி இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிச்சயம் இந்த கூட்டணி வெற்றி கூட்டணி தான் என ரசிகர்கள் இப்போதே வாழ்த்துக்களை சொல்ல தொடங்கிவிட்டனர்.

Trending News