திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஹீரோ அவதாரம் எடுத்ததற்கு இப்பதான் முழு திருப்தியாம்.. போற போக்கில் சிவகார்த்திகேயனை சொரிந்து விட்ட சந்தானம்

Actor Sandhanam: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படம் கலையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் இவருடைய படம் வசூல் அளவில் இப்படியும் வெற்றி பார்த்து விடும். அதற்கு காரணம் இவரின் படங்கள் மக்கள் மத்தியில் எப்பொழுதுமே நல்ல வரவேற்பு கிடைத்துவிடும். இதனைத் தொடர்ந்து இவருடைய அடுத்த படமாக அயலான் படம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது.

இப்படி இவருடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இவரையே மிஞ்ச வேண்டும் என்று காமெடி ட்ராக்கை விட்டு நடிகராக வந்தவர் தான் சந்தானம். அதாவது விஜய் டிவியில் இருந்து சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன் இவர்கள் இருவருமே சினிமாவிற்கு நுழைந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்து விட்டார்கள்.

Also read: சுயநலமாக நடந்து கொண்ட சிவகார்த்திகேயன், சூர்யா.. திறமையால் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த விஜய்

ஆனாலும் சந்தானத்திற்கு அப்புறம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் நுழைந்த கொஞ்சம் வருடத்திலேயே கதாநாயகனாக மாறி தொடர்ந்து படங்களை வெற்றியாக கொடுத்தார். அந்த வகையில் தற்போது அடுத்த ரஜினி, விஜய் என்று சொல்லும் அளவிற்கு இவருடைய வளர்ச்சி வளர்ந்து விட்டது.

இதனால் பொறாமைப்பட்டு வருத்தத்தில் இருந்த சந்தனம், எப்படியாவது சிவகார்த்திகேயனை முந்த வேண்டும் என்று இவரும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் சொல்லும் படியாக ஓடவில்லை அனைத்தும் தோல்வியை சந்தித்தது. ஒரு கட்டத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் பக்கத்தில் போகவே முடியாது என்று முடிவெடுத்து மறுபடியும் காமெடியனாகவே பயணத்தை தொடரலாம் என்று யோசித்து விட்டார்.

Also read: சந்தானத்தை ஓரங்கட்ட பார்த்த கவுண்டமணி.. சிம்பு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

இப்படி இருக்கும் பட்சத்தில் இவர் கடைசியாக நடித்த படமான டிடி ரிட்டன்ஸ் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் முக்கால்வாசி தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாகும் நிலைமைக்கு படுஜோராக வெற்றி அடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வசூல் அளவிலும் அதிக லாபத்தை பார்த்து வருகிறது. அந்த வகையில் சந்தானம் நினைத்தபடி சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளி விட்டார்.

அதாவது மாவீரன் படத்தை விட டிடி ரிட்டன்ஸ் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. சிவகார்த்திகேயனை விட நாம் பெரிய ஆளாக வேண்டும் என்று நினைத்து வந்தவருக்கு இப்படம் ஒரு மகிழ்ச்சியை அவருக்கு கொடுத்திருக்கிறது. ஆனாலும் இனிமேல் சந்தானம் நினைத்தாலும் கூட சிவகார்த்திகேயன் பக்கம் போக முடியாது அந்த அளவிற்கு அவருடைய வளர்ச்சி இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Also read: பிசிறு தட்டாமல் ரஜினியை பாலோ செய்யும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் பட தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்

Trending News