திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சுப்மான் கில்லுடன் டேட்டிங் செய்த வைரல் புகைப்படம்.. பதறி போய் விளக்கம் அளித்த சாரா டெண்டுல்கர்

Sara Tendulkar – Shubman Ghill: எந்த துறையாக இருந்தாலும் பிரபலங்கள் என்று வந்துவிட்டால் ஏற்றத்தாழ்வுகள் எல்லாத்தையும் சந்தித்தே ஆக வேண்டும். எந்த அளவுக்கு அவர்கள் குடும்பத்தின் மீது புகழ் வெளிச்சம் விழுகிறதோ, அதே அளவுக்கு சர்ச்சைகளும் வரத்தான் செய்யும். அப்படித்தான் கிரிக்கெட் உலகத்தின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

சாரா டெண்டுல்கர் கடந்த சில வருடங்கள் வரை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகளாக மட்டும்தான் பார்க்கப்பட்டார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சுப்மான் கில்லின் காதலியாக பார்க்கப்படுகிறார். இது எந்த அளவுக்கு உண்மையான விஷயம் என்பது தெரியவில்லை.

ஆனால் சுப்மான் கில், சாரா டெண்டுல்கரை டேட்டிங் செய்வதாக சொல்லப்படுகிறது. மீடியாக்கள் கூட சுப்மான் விளையாடும் போதெல்லாம் கிரவுண்டுக்கு வரும் சாராவை அதிகமாக போக்கஸ் செய்து அந்த புகைப்படங்களை தங்களுடைய டிஆர்பிக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த சர்ச்சை பற்றி இதுவரை அவர்கள் இருவருமே வாய் திறக்காமல் தான் இருந்து வந்தார்கள்.

Also Read : கையில பீர், காலுக்கு கீழே உலக கோப்பை.. இந்திய வீரர்களின் உணர்ச்சியை கேவலப்படுத்திய ஆஸ்திரேலியா!

இந்த நிலையில் சாரா டெண்டுல்கர் மற்றும் சுப்மான் கில் இணைந்து எடுத்த புகைப்படங்கள் என சமூக வலைத்தளத்தில் இருவரின் நெருக்கமான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. இதனால் இருவரும் காதலை உறுதிப்படுத்தி விட்டார்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற செய்தியும் பரவத் தொடங்கியது.

விளக்கம் கொடுத்த சாரா டெண்டுல்கர்

சாரா டெண்டுல்கர் மற்றும் சுப்மான் கில்

deep fake Sara Tendulkar - Shubman Ghill
deep fake Sara Tendulkar – Shubman Ghill

இந்த புகைப்படங்களை பற்றி சாரா தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். இது சாராவின் உண்மை புகைப்படம் இல்லையாம். அவர் தன் தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பயன்படுத்தி, தம்பியின் முகத்திற்கு பதிலாக சுப்மான் கில் புகைப்படத்தை டீப்ஃபேக் என்னும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் கஜோல் போன்றவர்கள் இந்த தொழில்நுட்ப புகைப்படங்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். தற்போது சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவும் இது போன்று பாதிக்கப்பட்டிருக்கிறார். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது போன்ற புகைப்படங்களை, வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையிலும் இது தொடர்ந்து வருகிறது.

Also Read : ஐஸ்வர்யா ராயை அசிங்கமாக பேசிய பாகிஸ்தான் வீரர்.. கிளம்பிய எதிர்ப்பால் அடித்த அந்தர் பல்டி

Trending News