Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

சசிகுமார் – சரத்குமார் மோதல்! நாளை வெளியாகும் ‘நா நா’!

சசிகுமார் – சரத்குமார் மோதல்! நாளை வெளியாகும் ‘நா நா’!

‘சலீம்’படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘நா நா’.நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வந்த இப்படம் நாளை (நவம்பர் 20)தியேட்டர்ககளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.


சமூகத்தில் கடினமாக உழைத்தாலும் தனக்கான அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருக்கும் சசிகுமார், ஒரு கட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்குகிறார். அவருடைய நடவடிக்கைகள் காவல்துறையின் கவனத்தை ஈர்க்கின்றன. இதையடுத்து, அவரைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார்.

ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.‘அர்ஜுன் ரெட்டி’,‘கபீர் சிங்’,‘அனிமல்’உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டிலும் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.


இப்படத்தில் சித்ரா சுக்லா,ஹரிப்ரியா மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ளனர்.இவர்களில் யார் பிரதான கதாநாயகி என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை.


2023ஆம் ஆண்டு இதன் ட்ரெய்லர் வெளியாகிய நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு இப்படம் வெளியாகிறது.பி.கே. ராம் மோகன் தயாரிப்பில்,கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.மேலும்,இப்படத்தில் மறைந்த மூத்த நடிகர் டெல்லி கணேஷும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.