வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எவனுக்கும் பயப்பட மாட்டான் இந்த சூர்யா.. மேடையில் பட்டம் கொடுத்து பாராட்டிய பிரபலம்

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் தயாராகி திரையரங்குகளுக்கு மார்ச் 10-ஆம் தேதி வர இருக்கிறது. இந்த படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே இந்த படம் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் கொரோனா சூழ்நிலை காரணமாக இதற்கான ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பல நடிகர்கள் நடிகர் சூர்யாவை பெரிய வார்த்தைகளைக் கொண்டு பாராட்டி பேசியிருக்கின்றனர். அப்படி இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ் அவர்கள் சூர்யாவை வெகுவாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

தமிழ் நடிகர்களில் சூரரைப்போற்று ஜெய்பீம் போன்ற வித்தியாசமான கதைக்களம், அரசியல் நெடி பேசும் வசனங்கள் என்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடிக்கும் தைரியம் நடிகர் சூர்யாவிற்கு மட்டுமே உண்டு என்று கூறியிருக்கிறார். குறிப்பாக இந்த இரண்டு படங்களிலும் பெரியார் மற்றும் அம்பேத்கரை பயன்படுத்தி அதனை மக்களுக்கு அறியும்படி அவர்களை பற்றி தெளிவாக சொன்னதற்கு சூர்யா அவர்களுக்கு நன்றி.

எனக்கு மிக்க மகிழ்ச்சி இருக்கிறது அதில் என்று கூறினார். ஊரில் இருக்கும் பல நடிகர்களுக்கு அடைமொழி இருக்கையில் சூர்யாவிற்கு ஏன் இருக்கக் கூடாது என்று அவருக்கு புரட்சி நாயகன் என்று மேடையிலேயே சூர்யாவுக்குப் பட்டம் சூட்டினார். அதன் பிறகு பேசிய இந்த படத்தின் கதாநாயகி பிரியங்கா அருள் மோகன் நடிகர் சூர்யாவை நடிப்பின் நாயகன் என்றுதான் கூற வேண்டும் என்று பிரியங்கா குறிப்பிட்டு கூறினார்.

அவருடன் நடித்த அனுபவம் நன்றாக இருந்ததாகவும் கூறினார். படம் வெகுவிரைவில் வெளியாக இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்கள் தான் இருப்பதால் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

சூர்யாவுக்கு இதற்கு முன்னால் வந்த இரண்டு படங்களும் OTT யில் ரிலீஸ் ஆனதால் இந்த படம் திரையரங்குகளுக்கு வருவதால் அவரது ரசிகர்கள் பெரிய திரையில் சூர்யாவை காண ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த படமும் சூர்யாவுக்கு வெற்றியை கொடுத்தால் இது சூர்யாவின் ஹாட்டிரிக் வெற்றியாக நிச்சயம் இருக்கும்.

Trending News