தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களும் தங்களின் படங்களின் மூலம் அரசியல் பேசுவது மட்டுமல்லாமல் அரசியலுக்கும் வந்திருக்கிறார்கள். ஆனால் உலக நாயகன் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் என்பது தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளுக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அரசியல் களத்தில் குதித்தவர் தான் கமலஹாசன். அரசியலுக்கு வந்த புதிதில் ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்று ரொம்பவும் பகிரங்கமாகவே அறிவித்தார்.
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு பிரச்சாரமும் செய்தார். அப்போது தன்னுடைய விஸ்வரூபம் பட ரிலீஸின் போது ஏற்பட்ட பிரச்சனையை பற்றியும் பேசினார். இது தற்போது அவர் மீது மிக பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது அரசியல் விமர்சகரும், யூடியூப் பிரபலமும் ஆன சவுக்கு சங்கர், கமலஹாசன் மீது ஒரு மிகப் பெரிய குற்றசாட்டை வைத்திருக்கிறார் . அதாவது கமலுக்கு அரசியலை விட இப்போது இந்தியன் 2 தான் முக்கியமாக இருக்கிறது. அதற்காக தான் அவர் உழைத்து வருகிறார் என்று சொல்லி இருக்கிறார்.
Also Read: எனக்கு போட்டி நான்தான்டா.. பொங்கலுக்கு இந்தியன்-2 உடன் மோதும் ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்
மேலும் பேசிய அவர் கமலுக்கு பல வருடங்களுக்கு பிறகு விக்ரம் படத்தின் வெற்றி தான் மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றி என்றும், அதனால் கமல் செய்தவறியாது மகிழ்ச்சியில் திளைத்து கொண்டு இருக்கிறார், இது போன்ற அடுத்த வெற்றிக்காக காத்து கொண்டிருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறார்.
கமலஹாசன் இந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததே இந்தியன் படத்தின் ரிலீஸ் மற்றும் வெற்றியை மனதில் வைத்து தான் என்று குற்றம் சாட்டியிடுகிறார் சவுக்கு சங்கர். கமலஹாசனின் இந்த திடீர் ஆதரவு அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
Also Read: இந்தியன் 2வில் ஷங்கருக்கு கட்டளையிட்ட உலகநாயகன்.. உயிரே போனாலும் அவர் காட்சிகளை நீக்க கூடாது