வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அசிங்கப்பட்ட ஜனனி.. அப்பத்தாவை பார்சல் செய்ய திட்டம் போட்ட குணசேகரன்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் ஒரு பெண் தனக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை தைரியமாக எவ்வாறு கையாண்டு அதற்கு தீர்வு காண வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இக்கதையானது அமைந்துள்ளது. குடும்பத்திற்கு ஒரு குணசேகரன் போல் சமூகத்திலும் முரட்டு குணம் கொண்ட ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஜனனி பைனான்ஸ் எக்ஸிக்யூட்டர் ஆக பணியில் சேர்ந்துள்ள நிலையில் அதற்கான வேலையை தொடங்கியுள்ளார். ஜனனி ஒரு கிளைன்ட் இடம் உங்களது பணத்தை எங்களது கம்பெனியில் செலுத்துங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று ஜனனி கூறுகிறார். அதற்கு அவர் நான் உங்களது கம்பெனியில் எனது பணத்தை போட்டு நீங்கள் அதை எடுத்துக்கொண்டு ஓடி விட்டீர்கள் என்றால் என்ன செய்வது என்று ஜனனியை அசிங்கப்படுத்துகிறார்.

Also Read: டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

அதற்கு ஜனனி அப்படியெல்லாம் எதுவும் ஆகாது சார் என்று எடுத்து கூறுகிறார். ஆனால் அவரோ ஜனனியை நீ ரொம்ப திமிராக பேசுகிறாய் என்று மட்டம் தட்டுகிறார். இதனை ஈஸ்வரியின் அப்பா கவனித்து கொண்டிருப்பது போலவும், வீட்டில் குணசேகரன் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டின் மத்தியில் ஒரு மீட்டிங்கை போட்டு கொண்டு இருக்கிறார்கள். அதில் குணசேகரன் ஞானத்திடம் அப்பத்தா கிழவி சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று சொன்னார்களே அதற்கான ஏற்பாட்டை கொஞ்சம் பார் என்று குணசேகரன் உச்சகட்ட கடுப்பில் கூறுகிறார்.

உடனே விசாலாட்சி எதற்குப்பா இதெல்லாம் என்று குணசேகரனை பார்த்து கூறுகிறார். குணசேகரன் அதற்கு அங்கு சென்று வந்தால் எல்லா பிரச்சனைகளும் முடிந்து விடும் என்று குணசேகரன் விசாலாட்சியிடமும் கதிர் மற்றும் ஞானத்திடமும் ஒரு சூழ்ச்சி நிறைந்த பார்வையோடு கூறுகிறார். பட்டம்மாள் அப்பத்தாவின் சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகையை குடும்பத்தில் உள்ள அனைவரும் சிறப்பாக கொண்டாட செல்ல இருக்கிறார்கள்.

Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

அப்பத்தாவின் சொந்த ஊரில் வைத்து குணசேகரன் ஏதோ ஒரு சூழ்ச்சி செய்ய திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் தொடர்ந்த அப்பத்தாவிடம் நோஸ்கட் வாங்கிக் கொண்டிருக்கும் குணசேகரன் விடாமுயற்சியால் அப்பத்தாவை பழிவாங்கும் நோக்கில் தற்பொழுது ஒரு திட்டத்தை போட்டுள்ளார்.

அப்பத்தாவிடம் இருக்கும் 40 சதவீத பங்கை தனதாக்கிக் கொள்ள தனது தம்பிகளுடன் பல்வேறு சூழ்ச்சிகளில் இறங்கியுள்ளார். பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்பதை போல் பணத்தாசை பிடித்த குணசேகரன் அப்பத்தாவை சொந்த ஊருக்கு பார்சல் செய்து தீத்து கட்டும் முடிவில் இருக்கிறார்.

Also Read: சன் டிவியின் டிஆர்பியை ஏற்றிய ‘எதிர்நீச்சல்’ நாயகி நந்தினி.. வலி நிறைந்த ஹரிப்ரியாவின் சொந்த வாழ்க்கை

Trending News