Second part of 90s kids favorite serial: சன் டிவி சீரியலுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு தற்போது மக்களிடம் இருந்து வருகிறது என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது “சித்தி” நாடகம் தான். எதார்த்தமான கதையும், மக்களை கவரக்கூடிய வகையில் நடிப்பும் ஒவ்வொருவரிடமும் இருந்ததால் அமோக வரவேற்பை பெற்றது. முக்கியமாக இந்த நாடகத்தின் டைட்டிலுக்கு ஒளிபரப்பாகும் பாடலுக்கு அத்தனை பேர் அடிமை என்றே சொல்லலாம்.
அப்படிப்பட்ட இந்த நாடகத்திற்குப் பிறகு அதிகமாக மக்கள் ரசித்துப் பார்த்த நாடகம் எது என்றால் “மெட்டிஒலி”. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சித்திக் தயாரிப்பில் சன் டிவியில் 800 எபிசோடுகளை கடந்து வெற்றி பெற்றது. ஐந்து பெண் பிள்ளைகளை பெற்ற அப்பா டெல்லி குமார் தன்னந்தனியாக அந்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி ஒவ்வொருவருக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு அந்த பெண்கள் புகுந்த வீட்டில் அனுபவிக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை காட்டப்பட்டிருக்கும். டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து இந்த ஒரு நாடகம்தான் அதிக முன்னிலையில் வந்தது. இதில் நடித்த கதாபாத்திரங்கள் தற்போது வரை மக்கள் மனதில் நீங்காத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
Also read: ராஜி பற்றிய உண்மையை கோமதியிடம் கூறிய பாக்கியா.. கதிருக்கு திருமணத்தை பண்ணி வைக்கும் மீனா
அத்துடன் இதில் வரும் பாடல் “அம்மி அம்மி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து” இந்த வரிகள் இன்னமும் ஒவ்வொரு வீட்டிலும் ஒளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நாடகம் மறுபடியும் இரண்டாம் பாகமாக வரப் போகிறது என்று கிட்டத்தட்ட பல செய்திகள் வெளி வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆனால் தற்போது இதில் நடித்த பழைய ஆர்டிஸ்ட்களையும் ,கதைக்கு தகுந்தாற்போல் புது கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்னும் ஓரிரு மாதங்களில் மெட்டிஒலி 2 வரப்போகிறது. ஆனால் இதை தற்போது திருமுருகன் இயக்கவில்லை. சினி டைம் நிறுவனத்தின் சார்பில் சித்திக் தான் தயாரிக்கிறார். ஆனால் திருமுருகனுக்கு பதிலாக இயக்குனர் விக்ரமாதித்யன் இயக்க இருக்கிறார். இவர் மெட்டி ஒலியை இயக்கிய பொழுது செகண்ட் யூனிட் இயக்குனராக இருந்திருக்கிறார்.