திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலஹாசன் தூவிய விதை.. தாலி நோ, லிவிங் டுகெதர் கலாச்சாரத்தில் ஊறிப்போன 8 ஜோடிகள்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பான தமிழ் சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் சுவாரசியமான லிஸ்ட் ஒன்றை பார்க்கப் போகிறோம். தமிழ் சினிமாவில் தாலிகட்டாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த பிரபலங்களை பற்றி. வாருங்கள் லிஸ்டை பார்க்கலாம்.

விஷால் – வரலட்சுமி: நடிகர் விஷாலும், வரலட்சிமியும் இனைந்து மஜகஜராஜா என்னும் திரைப்படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் நடித்தனர். இந்த படம் இன்று வரை வெளிவரவில்லை. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதல், தொடர்ந்து நீடித்தது. நிச்சயம் இவர்கள் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோடியாக உலாவந்தனர். இந்த நேரத்தில் இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததாக ஒரு செய்தியும் உண்டு. பின்னாளில் இவர்கள் பிரிந்தது தனிக்கதை. இன்றுவரை இருவரும் சிங்கிளாகவே இருக்கிறார்கள்.

சிம்பு – நயன்தாரா: வல்லவன் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையில் காதல் பிறந்தது. இருவரும் பல இடங்களில் ஊர் சுற்றினார்கள். மேலும் நயன்தாராவின் உதட்டை சிம்பு கவ்வி இழுக்கும் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளம் எல்லாவற்றிலும் நிரம்பி வழிந்தது. சில காலம் இருவரும் தாலி காட்டாமல் தனிக்குடித்தனம் நடத்தியதாக அப்போதைய சினிமா பத்திரிகைகள் தெரிவித்தன. பின்னர் இவர்கள் பிரிந்தது அனைவரும் அறிந்த தகவல்

சித்தார்த் – சமந்தா: சித்தார்த்தும் சமந்தாவும் தெலுங்கு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தபோது இவர்களுக்குள் ஈர்ப்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் ஆந்திராவில் தனியாக கணவன் மனைவி போல வாழ்ந்தனர் என்று கூறப்பட்டது. பின்னர் இந்த காதல் கசந்து போனது. அதன் பிறகு ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த் மறைமுகமாக பல முறை சமந்தாவை விமர்சித்தார். சமீபத்தில் கூட நாக சைதன்யாவை அவர் பிரிவது என்ற முடிவை அறிவித்தபோது, ட்விட்டரில் சமந்தாவை கிண்டல் செய்திருந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

பிரபு தேவா – நயன்தாரா: நயன்தாராவின் இரண்டாவது காதல் வில்லு படத்தில் நடித்தபோது வந்தது. அந்த படத்திற்கு பிரபுதேவா இயக்குனர். 13 வயது வித்தியாசம் இருந்தபோதும் இருவரும் காதலால் தனியாக வாழ்ந்துவந்தனர். பிரபுதேவாவின் மனைவி ரமலத் (இவரையும் காதலித்து தான் திருமணம் செய்திருந்தார் பிரபுதேவா) நயன்தாராவைப்பற்றி வெளிப்படையாக கேவலமாக திட்டி இருந்தார். பிரபு தேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி இருந்தார் நயன்தாரா என்பதும் குறிப்பிட தக்கது.

சிம்பு – ஹன்சிகா: சிலம்பரசன், ஹன்சிகாவுடன் நடிக்கும்போது, அவரை காதலில் வீழ்த்தினார். ஹன்சிகா வீட்டில் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்த போதும், அவர்களை சமாளித்து சிம்புவை திருமணம் செய்வது என்ற முடிவில் இருந்தார். ராஜேந்தரும் இந்த திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டி இருந்தார். அதனால் இருவரும் தனியே லிவிங் டுகெதர் செய்து வந்தனர். யார் கண் பட்டதோ, இருவருக்குள்ளும் பிரிவு வந்து, விலகிவிட்டனர்.

கமல்ஹாசன் – சரிகா: கமல்ஹாசன் தன்னுடைய முதல் மனைவியான வாணி கணபதியை சட்டப்படி விவாகரத்து செய்ய இருந்த சமயம், சரிகாவுடன் காதலில் இருந்தார். மும்பையில் இருவரும் தனியாக குடும்பம் நடத்தினார்கள். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன்பே, வயிற்றில் ஸ்ருதிஹாசனை சுமந்துகொண்டு இருந்தார் சரிகா என்பதை கமலே கூறி இருக்கிறார்.

சரத்குமார் – நக்மா: சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், சில படங்களில் நக்மாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்போது இருவருக்குள்ளும் காதல் உருவாகியது. சரத்குமார் தனது முதல் மனைவியுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சமயம் அது. நக்மாவுடன் அவர் தனியாக வசித்து வருவதாக சினிமா செய்திகள் அப்போது தெரிவித்தன. நிச்சயம் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, நக்மாவை கரம் பிடிப்பார் என்று எதிர்பார்த்த போது, இருவரும் பிரிந்தனர்.

கமல்ஹாசன் – சிம்ரன்: பம்மல் கே. சம்பந்தம், பஞ்ச தந்திரம் படங்களில் நடித்தபோது கமலுடன் நட்பில் விழுந்து காதலில் திளைத்தார் சிம்ரன். அப்போது தனித்து வாழ்ந்து வந்த கமலுடன் லிவிங் டுகெதர் முறையில் சிம்ரன் இருந்தார் என்றும் கூறுவார்கள். ஆனபோதும் இவர்கள் பிரிந்துவிட்டனர். பின்னர் சிம்ரன் ராஜு சுந்தரத்தை திருமணம் செய்வார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் நிறைவேற வில்லை என்பது வேறுகதை.

Trending News