20 ஓவர் உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் 16 இல் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிகளில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), , ஹர்ஷல் படேல்,தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங். போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Also Read: அநியாயம் செய்யும் ராகுல் டிராவிட்.. இந்திய அணி நட்சத்திர வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
சமீப காலமாக இந்திய அணியின் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட முகமது சமி உலக கோப்பை அணியில் தேர்வாகவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அவரை தொடர்ந்து முக்கியமான ஒரு அதிரடி ஆட்டகாரரும் கழட்டிவிடப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று தந்தவர் சஞ்சு சாம்சன். இவர் வெளி மண்ணில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படக் கூடியவர். இவரையும் தற்போது உலக கோப்பை அணியில் இருந்து கழட்டிவிட்டுள்ளது தேர்வுக்குழு.
Also Read: தலைகனம் இல்லாத ராகுல் டிராவிட்.. கங்குலியை வியக்க வைத்த அந்த செயல்!
முகமது சமி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் அணியில் தேர்ந்தெடுக்கப்படாததை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்துள்ளனர். முகமது சமி டாப் ஆர்டர் விக்கெட்டுகளை சரி ப்பதில் திறமை வாய்ந்தவர். அதேபோல் கடைசி விக்கெட்டுக்களை எடுக்கும் துல்லியமான யார்க்கர் பந்துகளையும் வீச கூறியவர்.
சஞ்சு சாம்சன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் 20 ஓவர் போட்டிகளில் நிச்சயம் திறம்பட செயல் படுவார்கள். அவர்கள் வெறும் 20 பந்துகள் பிடித்தாலே போதும் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார்கள். ஆகையால் அவரை எடுக்காதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான்.
Also Read: மனைவியுடன் ரோமன்ஸ் செய்யும் ரோகித்ஷர்மா.! வைரலாகும் புகைப்படங்கள்.!