Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அந்த 2 ஆம் பாகமா? இந்த 2 ஆம் பாகமா? குழம்பி இருக்கும் செல்வராகவன்.. தம்பி கொடுத்த பலே ஐடியா!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சமீபத்தில் வெளியான சாணி காகிதம், பீஸ்ட் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராகவும் நல்ல பெயர் எடுத்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் […]

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சமீபத்தில் வெளியான சாணி காகிதம், பீஸ்ட் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராகவும் நல்ல பெயர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

இருப்பினும் இயக்குனராக செல்வராகவனை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்காகவே இப்பொழுது செல்வராகவன் அவருடைய தம்பியை தனுஷ் கதாநாயகனாக வைத்து நானே வருவேன் என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தை செல்வராகவன் ஏற்கனவே தனுஷை வைத்து எடுத்த மயக்க என்ன என்ற திரைப்பட பாணியில் ஆக்சன் திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

இந்தப்படத்தில் செல்வராகவனும் உடன் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். விரைவில் ரிலீஸாக உள்ள நானே வருவேன் திரைப்படத்திற்குப் பிறகு அடுத்து எந்த படத்தை இயக்குவது என செல்வராகவன் குழம்பிப் போயிருக்கிறார்.

இந்நிலையில் செல்வராகவன் இயக்குவதை நிறுத்தி விட்டார். அவர் நடிப்பில் கவனம் செலுத்துகிறார் என புரளிகள் கிளம்பிய வண்ணம் இருந்தது .ஆனால் அதையெல்லாம் பொய்யென்று புரிய வைத்துள்ளார் செல்வராகவன். இப்பொழுது அவர் இரண்டு பெரிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார்.

ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய இரு படங்களும் இரண்டாம் பாகமாக வெளிவர இருக்கிறது. எந்த படத்தை முதலில் எடுப்பது என குழப்பத்தில் இருந்த செல்வராகவனுக்கு அவரது தம்பி தனுஷ் பலே ஐடியா ஒன்று கொடுத்துள்ளார்.

‘நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் எடுத்தால், அதற்கு நீண்ட நாட்கள் ஆகும், அதே போல் கெட்டப்பும் தேவைப்படும். அதனால் நீங்கள் இப்பொழுது லோ பட்ஜெட் படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடியுங்கள்’ என அறிவுரை கூறியுள்ளார். அவர் சொல்ல யோசனையும் சரியாக இருப்பதால் அந்த முடிவையே செல்வராகவனும் எடுத்திருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.