வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரசிகர்கள் கொண்டாட தவறிய படம்.. 2ஆம் பாகத்தை யோசிக்காத செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் தொட்டதெல்லாம் தொடங்கும் என்பது போல ஆரம்பத்தில் இவர் இயக்கிய எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுவும் தனது தம்பி தனுஷை வைத்து இவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்கள் ஹிட் அடித்தது.

தற்போது மீண்டும் செல்வராகவன், தனுஷ், யுவன் கூட்டணியில் வெளியாகி உள்ள நானே வருவேன் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இயக்குனர் மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் செல்வராகவன் கலக்கி வருகிறார்.

Also Read :தமிழில் படம் இயக்க பிடிக்கவில்லை.. விரக்தியில் ஆவேசமாக பேசிய செல்வராகவன்

இந்நிலையில் செல்வராகவன் மெகா பட்ஜெட்டில் எடுத்த ஒரு படத்தை முதலில் மக்கள் கொண்டாட தவறிவிட்டனர். அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு அந்தப் படத்திற்கு கிடைத்தாலும் இரண்டாம் பாகம் எடுக்க செல்வராகவன் தயக்கம் காட்டி வருகிறார்.

அதாவது தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் ஆகியோரை வைத்து செல்வராகவன் இயக்கிய படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

Also Read :தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஆனால் படம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்குக் காரணம் மக்களுக்கு அப்போது இந்த கதையில் குழப்பம் இருந்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட தவறிவிட்டனர். அதன் பின்பு தான் இந்தப் படத்தின் கதையை புரிந்து கொண்டார்கள்.

இதனால் ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஆனால் முதல் பாகம் பெரிய அடி கொடுத்த நிலையில் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகனுடன் ஆர்வமில்லாமல் உள்ளாராம். சில சமயங்களில் இவ்வாறு நல்ல படங்கள் மக்களை அடைய வெகு காலம் ஏற்படுகிறது.

Also Read :சிம்புக்கு போட்டியாக டீசரை இறக்கிவிட்ட செல்வராகவன்.. சைக்கோவாக மிரட்டும் தனுஷ்

Trending News