சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கயானா மைதானம் எங்களுக்கே காலரைத் தூக்கும் இங்கிலாந்து.. இந்திய அணி பலம் மற்றும் பலவீனம்

Semi Final: 2024உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரண்டு நாடுகளில் நடக்கிறது. இன்று இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

ஏற்கனவே மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான்மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களில் 12 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின் விளையாடிய தென்னாபிரிக்கா அணி 9 ஓவர்களில் ஒருவிக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. பொதுவாக அரை இறுதி போட்டிகள் என்றால் தென்னாபிரிக்காவிற்கு ஒரு நடுக்கம் ஏற்பட்டுவிடும் ஆனால் இம்முறை எளிதாக வென்று விட்டனர்.

இந்திய அணி பலம் மற்றும் பலவீனம்

இந்திய அணியைப் பொறுத்தவரை அவர்களது பலமே சுழற் பந்து வீச்சு மற்றும் டெப்த் பேட்டிங் வரிசைதான். விராட் கோலியை தவிர அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர் இது இந்திய அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அதிரடி வரிசையை ஸ்பின் மூலம் தகர்க்கலாம் என திட்டம் தீட்டுகிறது இந்தியா.

ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாஸ் பட்லர் நமக்கு ஒரு தலைவலியாக இருப்பார்கள். அவர்களைப் பவர் பிளேய்க்குள் அவுட் ஆக்கிவிட்டால் இந்திய அணிக்கு பலம் தான். இன்று நடைபெறும் கயானா மைதானம் பாஸ்ட் பௌலர்களுக்கு ஏற்றது.

இந்திய அணி, இங்கிலாந்து வேகப்பந்தை சமாளித்தால் மட்டும் போதும். ஆனால் இங்கிலாந்து அணியை பொறுத்த வரை, அரை மற்றும் இறுதிப்போட்டி என்றால் நாங்கள் வென்று விடுவோம் என காலரை தூக்கிவிட்டு திரிகின்றனர்

Trending News