நேற்று வாழ்வா சாவா என்ற அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது .கடந்த 2023 உலக கோப்பையை தொடர் பைனலில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் போட்டியாக இந்த அரை இறுதி பார்க்கப்பட்டது.
டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அந்த அணியின் கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் 70 ரன்கள் அடித்து அணியை நல்ல நிலைமைக்கு கொண்டு சென்றார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஒரு கட்டத்தில் 280-290 ரன்கள் அடிக்கும் நிலைமையில் இருந்த ஆஸ்திரேலியா அணியை இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தடுத்து நிறுத்தினார். ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அதிரடியாக விளையாடிய போது 48வது ஓவரில் தனது துல்லியமான டைரக்ட் ஹிட்டால் ரன் அவுட் செய்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு சரிந்தது.
அதுமட்டுமின்றி இந்தியா 43 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டை இழந்த போதிலும் கோலியுடன் தூண் போல் நின்று 45 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இவர்கள் 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை பதறடித்தனர்.
முடிவில் இந்திய அணி 48.1 ஓவரில் எஞ்சிய இலக்கை அடைந்து பைனலுக்கு தகுதி பெற்றது. பின்னர் ஓய்வறையில் சிறந்த பீல்டருக்கான விருதை ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொடுத்தார். பில்டிங் பயிற்சியாளர் திலீப்புடன் மாலையிட்டு கொண்டாடினார்கள் இந்திய அணி.