சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அனில் கும்ளேயை விட முரட்டு ஆபிஸரான கௌதம் கம்பீர்.. இப்பவே சீனியர் வீரர்களுக்கு வைக்கும் பொறி

இந்திய அணியை வெற்றிகரமாக பல பயிற்சியாளர்கள் வழி நடத்தியுள்ளனர். அவர்களுள் சிறந்து விளங்கியது கபில் தேவ், கிரேக் சேப்பல் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போன்றவர்கள். இவர்கள் தலைமையில் தான் இந்திய அணி வெற்றிகரமாக பல கோப்பைகளை வென்றுள்ளது.

2016ஆம் ஆண்டோடு ரவி சாஸ்திரி பதவி காலம் நிறைவடைந்தது. அதன் பின் இந்திய அணிக்கு 2017 ஆம் ஆண்டு அனில் கும்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ரவி சாஸ்திரி போல் இல்லாமல் அணில் கும்பி ஸ்ட்ரிட்டானபயிற்சியாளராக வலம் வந்தார். இதனால் அப்பொழுது கேப்டனாக இருந்த விராட் கோலிக்கும் இவருக்கும் முரண்பாடு ஏற்பட்டு பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் அணில் கும்ப்ளே.

அதன் பின்னர் மீண்டும் ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவருடைய நீட்டிப்பு காலமும் முடிந்தது. அதன் பின்னர் சரியான பயிற்சியாளர் அமையாமல் இந்திய அணி திணறி வந்தது. அதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக தற்சமயம் ராகுல் டிராவிட் அந்த பணியை சீரும். சிறப்புமாக செய்து வந்தார்.

ராகுல் டிராவிட் பதவிக்காலமும் இப்பொழுது முடிவடைந்தது. இந்திய அணிக்கு தற்சமயம் கௌதம் கம்பிரை பயிற்சியாளராக நியமித்துள்ளது பிசிசிஐ. அணில் கும்ளேயை விட மிகவும் கோபக்கார ஆபிஸர் கம்பீர்.

கௌதம் கம்பீர் பயிற்சியாளர் பதவி ஏற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விஷயத்தில் முதலாவதாக பெரிய செக் வைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வு கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் காம்பீர்.

ரோஹித், கோலிக்கு இப்பவே செக்

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் மற்றும் துலிப் டிராபி போட்டிகளில் சீனியர் வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்றும், இது அடுத்து வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கு பயிற்சியாக அமையும் என்றும் பிசிசிஐக்கு பரிந்துரைத்திருக்கிறார் புது பயிற்சியாளர் காம்பீர். வந்த உடனே கம்பீர் இப்படி செய்தது சீனியர் வீரர்களுக்கு பெரிய ஷாக்காக அமைந்துள்ளது. பல வருடங்களாக பிசிசிஐ பட்டியலில் “ஏ” பிரிவில் இருக்கும் வீரர்கள் இப்படி விளையாடியது இல்லை.

Trending News