Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

திரில்லரான 100-வது படத்தில் நாகார்ஜுனா

திரில்லரான 100-வது படத்தில் நாகார்ஜுனா

Nagarjuna : கடந்த சில வருடங்களாகவே சில படங்களில் மட்டும் நடித்து வந்த நாகார்ஜுனா இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் பிஸியாக காட்சியளிக்க தொடங்கியுள்ளார். தற்போது இவரது நடிப்பில் முக்கியமான பான் இந்தியா திரைப்படங்கள் உருவாகி கொண்டிருக்கின்றன. […]

Nagarjuna : கடந்த சில வருடங்களாகவே சில படங்களில் மட்டும் நடித்து வந்த நாகார்ஜுனா இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் பிஸியாக காட்சியளிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் முக்கியமான பான் இந்தியா திரைப்படங்கள் உருவாகி கொண்டிருக்கின்றன. அதனால்தான் நாகர்ஜுனாவுக்கு லக்கு அடிச்சிருக்கு என்பது போல் சினிமா உலகம் பேசத் தொடங்கியுள்ளது.

கலக்கப்போகும் நாகார்ஜுனா!

குபேரா படத்தில் நாகார்ஜுனா தீவிர போலீஸ் கதாபாத்திரத்தில் வலம் வருகிறார். இவரது மெச்சக்கூடிய நடிப்பு மற்றும் அபாரமான திறமை படத்தை ஹிட் லிஸ்ட்க்கு கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியுடன் கூலி படத்தில்!

ஒருவழியாக குபேரா படத்தை நடித்து முடித்த நாகார்ஜுனா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நாகார்ஜுனாவின் கதாபாத்திரம் பக்கா மாஸ் மற்றும் பவர்ஃபுல் என சொல்லப்படுகிறது.

இதில் கூடுதல் மாஸாக ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யாராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14 வெளியாக இருக்கிறது. திரையில் நடிப்பது மட்டுமில்லாமல் தற்போது ஓடிடி தளத்திலும் கலக்க இருக்கும் நாக அர்ஜுனா.

இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் ஒரு திரில்லர் இணைய தொடர் உருவாகிறது. இதுவே நாக அர்ஜுனாவின் முதல் தொடர். இந்த இணைய தொடர் 2025 இந்த வருடம் இறுதியில் வெளியிடுவதாக தகவல் வந்தன.

100-வது படத்தின் பிளான்!

வெற்றிப் பயணங்களை தொடர்ந்த நாக அர்ஜுனா தற்போது இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதுதான் நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாகும்.

சினிமாவில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து தற்போது வரும் வாய்ப்புகளை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார் நாக அர்ஜுனா. இவரது 100-வது படத்திற்காக தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.