ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பொறுமையும் ஒரு அளவுக்கு தான்.. அட்லீக்கு கடைசி வார்னிங் கொடுத்த சூப்பர் ஸ்டார்

இயக்குனர் அட்லீ ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹிட் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். கோலிவுட்டில் பல வருடங்களாக இயக்குனராக இருப்பவர்களுக்கு கூட கிடைக்காத வாய்ப்பாக அட்லீக்கு கிடைத்தது தான் தளபதி விஜய்க்கு படம் பண்ணும் வாய்ப்பு. அட்லீயும் அதை சரியாகத்தான் பயன்படுத்திக்கொண்டு முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார்.

அட்லீ மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தளபதி விஜய்க்கு அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. அதனால் தான் அடுத்தடுத்து அவருடன் சேர்ந்து படம் பண்ணினார். அத்தனை படங்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, பாக்ஸ் ஆபிஸில் கலெக்சனை வாரி வசூலித்தது. அட்லீயும், தளபதி விஜய்யும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்பது விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய ஏக்கமாகவே இருக்கிறது.

Also Read:விஜய்யிடமே வேலையை காட்டிய அட்லீ.. உச்சகட்ட கோபத்தில் கதறவிட்ட தளபதி

இதற்கிடையில் தமிழ் சினிமாவில் இவர் வந்து குறுகிய காலங்களே ஆன போதும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்கும் அதிர்ஷ்ட இயக்குனர் ஆனார். தளபதி விஜய்யுடன் ஹாட்ட்ரிக் வெற்றி படமாக பிகில் திரைப்படத்தை கொடுத்த பிறகு அட்லீயும், ஷாருக்கானும் இணைவதாக அறிவிப்புகள் வெளியாகி, படப்பிடிப்பு வேலைகளும் பரபரப்பாக தொடங்கப்பட்டன.

நயன்தாரா கதாநாயகி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லன் என தொடங்கப்பட்டு படத்தின் பெயர் ஜவான் என உறுதி செய்யப்பட்டு போஸ்டர்களும் வெளியாகின. படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக ஹைதராபாத் மற்றும் சென்னையிலும் நடைபெற்றன. ஆனால் சமீப காலமாக இந்த படத்தின் அப்டேட் மற்றும் ரிலீஸ் தேதி மட்டும் கிணற்றில் போட்ட கல்லாக கிடைக்கிறது. அட்லீயும் இந்த படத்தை பற்றி பொது நிகழ்ச்சிகளில் எதுவும் பேசுவதில்லை.

Also Read:தளபதி காட்டும் நெருக்கத்தால் தலை கால் புரியாமல் ஆடும் அட்லீ.. சன் பிக்சர்ஸை கதிகலங்க வைக்கும் சம்பளம்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு அவர் நடித்த பதான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பின்னர் மற்றொரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் இருக்கிறார். ஆனால் அட்லீயோ ஜவான் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் எதிலுமே கவனம் செலுத்தாமல் இருக்கிறாராம். படம் ஜூனில் ரிலீஸ் ஆவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போதைய தகவலின்படி படம் ஜூனில் ரிலீஸ் ஆவதும் சந்தேகம் தானாம். இதனால் ஷாருக்கான் இயக்குனர் அட்லீ மீது செம்ம காண்டில் இருக்கிறாராம். நாட்கள் செல்ல செல்ல இந்த படத்தின் மீதான இண்ட்ரெஸ்ட் அவருக்கு குறைந்தது தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம். ஆனால் படத்தை எப்படியாவது சீக்கிரம் ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று ஷாருக்கான் அட்லீக்கு வார்னிங் கொடுத்து இருக்கிறாராம்.

Also Read:வான் இந்த கமல் படத்தின் காப்பியா.. மீண்டும் திருட்டு கதையில் சிக்கிய அட்லீ

Trending News