புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வார்னே அடுத்து இறந்து போன 46 வயதுடைய ஆஸ்திரேலிய வீரர்.. கார் விபத்தில் மரணம்!

கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருந்த ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே, கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் சர்ச்சைக்கு, அதுவும் குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டு இருக்கும் பெயர் போனவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

இவருடைய மரணம் இயல்பான நெஞ்சுவலி என்று பிரேத பரிசோதனையில் சொன்னாலும், அவர் இறந்த சமயத்தில் 4 உலக அழகிகள் அவருடன் இருந்ததற்கான சிசிடிவி காட்சிகள் பதிவாகி, போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத கிரிக்கெட் ரசிகர்களுக்கு தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூஸ் சைமண்ட்ஸ் எதிர்பாராத விதத்தில் கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் சார்பில் விளையாடியுள்ளார். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1998-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இவருடைய அட்டகாசமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தவர்.

அதன்பிறகு ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பின்னர் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்றார். இந்த சூழலில் நேற்று குயின்ஸ்லாந்து பகுதியில் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.

46 வயதே உடைய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆறா துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து 2 முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் உயிரிழந்திருப்பது இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகப் பேசப்படுகிறது.

Trending News