ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே திடீரென இன்று மரணம் அடைந்தார். கிட்டத்தட்ட 15 வருடகாலம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
மொத்தமாக 708 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை செய்தவர். இன்று அவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் மரணமடைந்துள்ளார்.
அவர் வசித்து வந்த வீட்டில் மூச்சு பேச்சின்றி சுய நினைவை இழந்து கிடந்துள்ளார். விரைந்து வந்த மருத்துவர்கள் அவர் மரணத்தை உறுதி செய்துள்ளனர். மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் முழு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா நாட்டிற்காக 145 டெஸ்ட் போட்டிகளிலும், 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகள் என்றாலே விக்கெட்டுகளை அள்ளி விடுவார்.
இவரின் இடத்தை இன்றுவரை எந்த ஒரு ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களும் ஈடுகட்ட முடியவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளராக ஷேன் வார்ன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.