சாதாரண மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆகவே இருந்து தற்போது வெள்ளி திரையில் காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் ரோபோ சங்கர். இவர் திடீரென்று உடல் எடை குறைந்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.
அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து ஃபேமஸான ரோபோ சங்கர், சினிமாவிலும் டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
Also Read: விஜய் டிவி புகழ், பாலா செய்த அட்டகாசத்தால்.. சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்
அதிலும் தனுஷ் உடன் மாரி, அஜித் உடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என வெகு சீக்கிரமே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்க துவங்கி உள்ளார். இவர் பிகில் படத்தில் விஜய்யுடன் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ரோபோ சங்கர் மற்றும் அவருடைய மகள் இந்திரஜா இருவரும் அவ்வப்போது வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதிலும் ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
Also Read: நாங்களே அன்றாடம் காட்சி இவ்வளவு பைன் போட்டா எப்படி சார்.? பாசத்தை தொலைத்து கதறும் ரோபோ சங்கர்
மேலும் ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்தால் பயங்கர ஒல்லியாக மாறி பஞ்சத்தில் அடிபட்டவர் போல் தெரிகிறார். இதற்கு முன்பு நன்கு கட்டுமஸ்தான் போல் இருந்த ரோபோ சங்கர் இப்போது நோய்வாய்ப்பட்டு பல நாள் சிகிச்சையில் இருப்பவர் போல் தெரிகிறார்.
பஞ்சத்துல அடிபட்ட மாதிரி மாறிய ரோபோ சங்கர்
![robo-shankar-2-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/robo-shankar-2-cinemapettai.jpg)
இவருடைய இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே! ஏதேனும் உடல்நல பாதிப்பால் அவருக்கு இவ்வளவு உடல் எடை குறைந்து விட்டதா! என்று கேள்வி எழுப்புகின்றனர். சிலர், ‘ஓவரா குடிப்பார் போல’ என்றும் கிண்டல் செய்கின்றனர்.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ சங்கர்
![robo-shankar-1-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/robo-shankar-1-cinemapettai.jpg)
Also Read: ரோபோ சங்கரின் ஸ்டேட்டஜியை பின்பற்றும் போஸ் வெங்கட்.. இணையத்தைக் கலக்கும் புகைப்படம்!