வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோபம் தலைக்கேறிய ஷங்கர்.. உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சிருச்சி விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு முன்னணி நடிகரான ராம் சரண் தனது 15-வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக கியாரா அத்வானி தெர்வுசெய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘வினய விதேய ராமா’ என்ற படத்தில் நடித்திருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் இந்தப் படம் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜீவுக்கு 50வது படம். அத்துடன் இதற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

தற்காலிகமாக RC15 என பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு வில்லனாக விஜய் சேதுபதியை போடலாம் என ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக விஜய் சேதுபதியை அணுகியபோது அவர் பல கோடி சம்பளம் கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆடிப்போன படக்குழுவினர் விஜய் சேதுபதிக்கு பதில் மாநாடு படத்தில் வில்லனாக மிரள விட்ட எஸ்ஜே சூர்யாவை போட முடிவெடுத்திருக்கின்றனர். இருப்பினும் விஜய் சேதுபதியிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என டைரக்டர் ஷங்கருக்கு கோபம் தலைக்கேறி உள்ளது.

இதுவரை விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தேர்வு செய்து நடித்து மக்கள் செல்வன் என்ற பெயருக்கேற்றாற்போல் ரசிகர்களின் மனதில் கவர்ந்திருக்கிறார்.

இருப்பினும் ஷங்கர் படத்திற்காக சம்பளத்தை கறாராக பேரம் பேசி இருப்பதால் சமீபகாலமாகவே விஜய் சேதுபதிக்கு தலைக்கனம் ஏறிவிட்டதாகவும் இப்படி எல்லாம் நடந்து கொண்டதால் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது என கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.

Trending News