செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தென்னிந்திய சினிமாவின் பலத்தை உலக சினிமாவிற்கு காட்டிய ஷங்கர்.. அவரை அடையாளப்படுத்திய 5 படங்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள் இன்று. ஷங்கர் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகி விட்டது. ஷங்கர் அதிக பட்ஜெட் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்ட படங்களும் எடுத்துள்ளார். ஹாலிவுட் பட தரத்திற்கு இணையாக பல தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார். தமிழ் சினிமாவை பலப்படுத்தியதில் இயக்குனர் ஷங்கரிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஷங்கரின் அடையாளமான 5 படங்கள்.

ஜென்டில் மென் (1993): ஷங்கரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் KT குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான படம் ஜென்டில்மேன். அர்ஜுன், மதுமிதா, மனோரமா, வினீத், நாசர், கவுண்டமணி, செந்தில் நடித்த திரைப்படம். கல்வித்துறையில் நடக்கும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டினார். இந்த படம் அந்த நாட்களில் அதிகமான பட்ஜெட்டில் உருவானது. 175 திரை கண்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. மேலும் இந்த திரைப்படம் பல விருதுகளை பெற்றது.

41 வது பிலிம் பேர் விருதுகள்: சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர். தமிழ்நாடு தேசிய விருதுகள்: சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி பாடகி. சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்: சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடிகர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்.

காதலன் (1994): ஜென்டில்மேன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து KT குஞ்சுமோன் அவரது அடுத்த தயாரிப்பிலும் இயக்குனர் ஷங்கருடன் இணைந்தார். பிரபு தேவா, நக்மா, SP பாலசுப்ரமணியம், ரகுவரன் இணைந்து நடித்த படம் காதலன். மாநிலத்தின் கவர்னர் மகளை காதலிக்கும் சாமானியனின் கதையாக வரும் இந்த படத்திற்கு அன்று இருந்த ஆளுநர் அலுவலகத்திலிருந்து பல எதிர்ப்புகள் வந்தன, ஆனால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்தார். 3 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 15 கோடி வசூல் செய்து, பல விருதுகளையும் பெற்றது.

42 வது நேஷனல் விருதுகள்: சிறந்த பின்னணி பாடகர், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ். 42 வது பிலிம் பேர் விருதுகள்: சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர்.

ஜீன்ஸ் (1998): முழுக்க முழுக்க தொழில்நுட்ப உதவியுடன் எடுக்கப்பட்ட திரைப்படம், அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.
இந்த படத்தில் வரும் ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ பாடலுக்காக உலக அதிசயங்கள் 7 இடத்திற்கும் சென்று காட்சியாக்கினார். இந்த படம் பல மொழிகளில் ரிமேக் செய்யப்பட்டு நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. இந்த படம் அகாடெமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்தியன் (1996): 1996 ஆம் ஆண்டு கமல், சுகன்யா, மனீஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடக்கும் ஊழலை கண்டு ஆதங்கப்படுவது போல் எழுதப்பட்ட கதை. இந்த படம் ரஜினியின் பாட்ஷா பட வசூலை முறியடித்தது. இந்த படம் அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் பல அவார்டுகளையும் பெற்றது.

நேஷனல் விருதுகள்: சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ். தமிழ்நாடு தேசிய விருதுகள்: சிறந்த படம், சிறந்த நடிகர், பிலிம் பேர் விருதுகள்: சிறந்த படம், சிறந்த நடிகர். சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்: சிறந்த படம், சிறந்த நடிகர்.

முதல்வன் (1999): முதல்வன் திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்டது. பல உச்ச நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க மறுத்த போது அர்ஜுன் இந்த திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் பல விருதுகளை பெற்றது.

பிலிம்பேர் சிறந்த இசையமைப்பாளர் விருது, சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது, சிறந்த நடன இயக்குனருக்கான பிலிம்பேர் விருது
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, சிறந்த இசை அமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.

Trending News