திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஷங்கர் பிரமாண்ட படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. சம்பளத்தை கேட்டு ஆடிப் போன தயாரிப்பாளர்

எஸ்.ஜே.சூர்யா 1999 இல் வாலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.இவரது படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.ஆனால் இவர் இயக்குனர் என்ற அவதாரத்தை விட்டுவிட்டு நடிப்பே முக்கியம் என்று அப்போதே நடிக்க தொடங்கிவிட்டார். இவரை ஏன் நடிக்கிறார் என்ற கேள்வியும் பல நடிகர்கள் கேட்டு வந்தனர்.

ஆனால் இவர் தற்போது கதாநாயகனாக நடிப்பதை விட்டு விட்டு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.நல்ல பெயர் கிடைத்தது முக்கியமாக மாநாடு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரது நடிப்பு ஏறுமுகத்தில் அமைந்தது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனாக மாறி விட்டார்.

Also Read: எஸ் ஜே சூர்யா இனி படங்களில் நடிக்க தடை.. பணம் பத்தும் செய்யும் என்பது இதுதான்

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படமொன்றில் வில்லனாக நடிக்க இது ஜே சூர்யாவிடம் பேசியுள்ளனர்.இவருக்கு சம்பளம் 7 கோடி வரை பேசப்பட்டுள்ளது.இதுவரை எஸ்.ஜே.சூர்யா சினிமா வாழ்க்கையில் வாங்கிய அதிக பட்ச சம்பளம் இதுவே ஆகும்.இயக்குனராக இருக்கும்போது கூட இவ்வளவு சம்பளம் வாங்கியது இல்லை.

எஸ்.ஜே.சூர்யா பேசுகையில் ஷங்கர் அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியாக அதாவது ஒரே ஆற்றல் மற்றும் அதே பிரமாண்டம் மற்றும் அனைவரிடமும் அன்போடு பேசுவது என அப்படியே இப்போதுவரை இருந்து வருகிறார்.நான் நண்பன் படத்தில் நடிக்கும்பொழுது ஷங்கரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.இப்பொழுது இரண்டாவது படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

Also Read: வெப் சீரிஸில் நடிக்கும் SJ சூர்யா.. தலைசுற்ற வைக்கும் பட்ஜெட்!

தமிழ் சினிமாவின் வில்லன்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். விஜய் சேதுபதி தற்போது மல்டி ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதேபோல் எஸ்.ஜே.சூர்யா இப்பொழுது தெலுங்கு பக்கம் சென்று விட்டார் இவரும் மல்டி ஸ்டாராக வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

ஆனால் என்னதான் இவர் வில்லனாக நடித்தாலும் இவரது இயக்கத்தில் படம் எப்போது வரும் என்று தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கிறது.அந்த அளவிற்கு இவரது படம் மிகவும் வித்தியாசமாகவும் அனைவரையும் கவரும் விதத்திலும் இருக்கும்.கூடிய விரைவில் இவர் படம் இயக்க வேண்டும் என்று அனைத்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read: 54 வயது வர முரட்டு சிங்கிளாக இருப்பதற்கு இதான் காரணம்.. வியக்க வைத்த SJ சூர்யாவின் பதில்

Trending News