திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கடிவாளம் போட நினைத்த லைக்கா, கடைசி வரை பிடி கொடுக்காத சங்கர்.. இந்தியன் 2-வால் வந்த சோதனை

Indian 2: லைக்கா நிறுவனத்துக்கு கெட்ட நேரம் சுற்றி சுற்றி அடிக்கிறது. ஐடி ரெய்டு நடந்ததிலிருந்து லைக்கா நிறுவனம் அடிமேல் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட காலகட்டத்தில் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்து முன்னணி இடத்தில் இருந்தது இந்த நிறுவனம்.

விடாமுயற்சி, இந்தியன் 2 என அத்தனையுமே இழுபறியில் இருந்ததற்கு இந்த நிறுவனம்தான் காரணம் என பேசப்பட்டது. சமீபத்தில் ரிலீசான இந்தியன் 2 படம் லைக்காவுக்கு பெரிய நாமத்தை போட்டு விட்டது. ஒரு சதவீதம் கூட பாசிட்டிவ் விமர்சனங்கள் வராத பட லிஸ்டில் இப்போது இந்தியன் 2 இருக்கிறது.

இதற்கிடையில் இந்தியன் 3 ரிலீஸ் வேறு இருக்கிறது. இந்தியன் 2 ரிலீஸ் ஆகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது முக்கியமான விஷயம் ஒன்று வெளிவந்திருக்கிறது. வலைப்பேச்சு யூட்யூப் சேனலில் இதைப்பற்றி பேசி இருக்கிறார்கள்.

இந்தியன் 2-வால் வந்த சோதனை

அதாவது இந்தியன் 2 படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே லைக்கா படத்தை போட்டு காட்டுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் சங்கர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டாராம். எக்கச்சக்கமான புட்டேஜ்களை எடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதை மூன்றாம் பாகமாக எடுத்து விடலாம் என இஷ்டத்துக்கு இழுத்து விட்டு இருக்கிறார்.

தற்போது ரிலீசுக்கு பிறகு இருவது நிமிஷம் படத்தை கட் செய்து விடலாம் என லைக்கா சொல்லி இருக்கிறது. அதற்கும் முடியவே முடியாது என சங்கர் ஒற்றை காலில் நின்று இருக்கிறார். பின்னர் வம்படியாக 11 நிமிஷத்தை மட்டும் குறைத்துக் கொள்ளலாம் என்று வழிக்கு வந்திருக்கிறார்.

இப்படி தயாரிப்பாளர்களுக்கே படத்தை போட்டுக் காட்டாமல் வித்தைக்காட்டி இருக்கிறார் பிரம்மாண்ட இயக்குனர். லைக்கா தான் இந்த விஷயத்தில் சிக்கிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஏற்கனவே எடுத்த புட்டேஜ் காணாமல் போய்விட்டது என லால் சலாம் பட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு குண்டை தூக்கி போட்டார்.

காணாமல் போன வீடியோவை கொண்டு வந்தால் தான் படத்தை வாங்குவோம் என ஓடிடி தளங்கள் சொல்லி திருப்பி அனுப்பி விட்டன. அந்த பட பிசினஸ் லைக்காவுக்கு பெரிய அடியாக அமைந்தது. இதில் எக்கச்சக்க புட்டேஜ்களை எடுத்து வைத்துக்கொண்டு ஷங்கர் ஆட்டம் காட்டி இருக்கிறார்.

இந்தியன் 2 லைக்காவுக்கு லாபமா, நஷ்டமா.?

Trending News