வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பட்ஜெட்டில் பாதியை ஆட்டையை போடும் ஷங்கர்.. பகிர் கிளப்பிய பிரபலம்

பிரம்மாண்டம் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது இயக்குனர் ஷங்கர் தான். ஏனென்றால் தமிழ் சினிமாவில் எந்திரன், 2.o போன்ற பிரம்மாண்ட படங்களை ஷங்கர் கொடுத்துள்ளார்.இதனால்தான் அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது லைகா தயாரிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கமலஹாசன், காஜல்அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் தில் ராஜூ தயாரிப்பில் ராம் சரணின் 15வது படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார்.

Also Read : ரெட் கார்டு பஞ்சாயத்து வேஸ்ட்.. ஷங்கர் முடிஞ்சு இப்போ லைக்கா கண்ணில் விரல் விட்டு ஆட்டும் புயல் நடிகர்

இந்நிலையில் ஷங்கர் மீது பகீர் குற்றச்சாட்டை தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார். அதாவது ஷங்கர் பெரிய பட்ஜெட் படங்களை எடுப்பதில் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறது என்று கூறியுள்ளார். ஷங்கர் 500 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தால் மறைமுகமாக அதில் 50 கோடியை எடுத்துக்கொள்வார் என கே ராஜன் சொல்லியுள்ளார்.

இந்த விஷயத்தை ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டர் யாரிடமோ கூறியுள்ளதாகவும், அவர்களிடமிருந்து தனக்கு இந்த செய்தி வந்ததாக கே ராஜன் கூறியிருந்தார்.சாதாரணமாக ஒரு மளிகைக்கடையில் 100 ரூபாய் எடுத்தாலே கடையின் உரிமையாளர் கண்டுபிடித்து விடுவார்.

Also Read : 3 தரமான இயக்குனர்களை களமிறக்கும் ஷங்கர்.. கமலால் வந்த பிரச்சனையை சமாளிக்க இப்படி ஒரு திட்டம்

இவ்வாறு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படத்திற்கு கணக்கு வழக்கு சரியாக பார்க்கப்படும். இதில் எப்படி ஷங்கர் 50 கோடி எடுக்க முடியும். கோடிக்கணக்கில் பணம் குறைந்தால் தயாரிப்பாளர் கண்டுபிடிக்காமல் எப்படி இருப்பார்.

மேலும் தயாரிப்பாளர் பணம் கொடுக்கும்போது இதையெல்லாம் சரி பார்த்து தான் கொடுப்பார். ஏதோ ஒருவரைப் பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி ஷங்கர் பற்றி தப்பாக பேசி உள்ளார் கே ராஜன் என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : அதிக நாட்கள், குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படங்கள்.. விக்ரமின் படத்தை ஜவ்வாக இழுத்த ஷங்கர்

Trending News