வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஷங்கரிடம் கரராக சொன்ன கமல்.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு இந்தியன் 2 வில் செய்யும் புதிய முயற்சி

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் பல மாதங்களாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பானது 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதால் படம் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பானது நிலவி வருகிறது.  ஆனால் அதற்கு முன் விவேக் நடித்த காட்சிகள் முழுமை பெறாமல் இருப்பதால் அவற்றிற்கு புதுயுக்தியை கையாள பட குழுவானது திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் விவேக் நடித்த காட்சிகளில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி செய்தார். ஆனால் விவேக், கமலஹாசன் உடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இதுதான். அதுமட்டுமல்லாமல் இப்படம் விவேக்கின் கடைசி திரைப்படம் என்பதால் அவர் நடித்த காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று கமலஹாசன், சங்கரிடம் கராராக கூறியுள்ளார். இதனால் இயக்குனரின் முயற்சி பாதியிலே கைவிடப்பட்டது.

Also Read: கமல் வித்தியாசமான நடிப்பை காட்டிய ஐந்து படங்கள்.. இன்றுவரை மறக்க முடியாத சப்பாணி

இதனால் உலக நாயகனே இவ்வாறு கூறியதால் வேறு வழி இல்லாமல் விவேக் நடித்த காட்சிகளை வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார். ஆனால் விவேக் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் நான்கு நாட்கள் எடுக்கவேண்டிய சூழ்நிலை இருப்பதால் தற்பொழுது அதற்கான பணிகளில் பட குழுவானது ஆயத்தமாகி வருகின்றனர்.

இதற்காக புதுவித தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். அதிலும் படத்தில் விவேக் நடிக்க இருந்த காட்சிகளில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து ஹாலிவுட் படத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை போன்று அந்த நடிகரின் உருவத்தை விவேக் உருவமாக கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

Also Read: கமல் தேடி போய் வாய்ப்பு கொடுக்கும் 5 நடிகைகள்.. ராசியான நடிகை என பெயர் வாங்கிய ஆண்ட்ரியா

இதற்காகவே ஒரு பிரத்தியோக தொழில்நுட்பக் குழுவினை தயார் செய்து வருகிறார் இயக்குனர். மேலும் விவேக்கின் குரலை தத்ரூபமாக கொண்டு வருவதற்கு மிமிக்ரி ஆர்டிஸ்டை வைத்து பேச வைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் மீண்டும் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் விவேக்கை உயிரோட்டமாக  திரையில் காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு அதிக அளவில் பொருள் செலவு ஏற்படுவதால், இதுவரை எந்த ஒரு இயக்குனரும் இந்த யுக்தியை தமிழ் சினிமாவில் பயன்படுத்தியது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் விவேக் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கலைஞன் என்பதால் அவருக்காகவே பிரத்தியோகமாக இயக்குனர் இந்த முயற்சியினை கையாண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரபல நடிகையின் நிறைவேறாத காதல்.. முன்னாள் காதலியின் ஆசையை நிறைவேற்றிய கமல்!

Trending News