புதன்கிழமை, ஜனவரி 15, 2025

30 ஆண்டுகளில் ஷங்கரின் சொத்து.. இந்தியன்-2 சம்பளம் சேர்த்து 60 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

பிரம்மாண்டம் என்றாலே தமிழ் சினிமாவை பொருத்தவரையில் ஷங்கர் மட்டும் தான். தயாரிப்பாளர்கள் எந்த தயக்கமும் இன்றி இவருடைய படத்தில் முதலீடு செய்வதற்கு காரணம் எப்படியும் போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு எடுத்து விடுவார் என்பதுதான். அந்த வகையில் முதலாவதாக ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது புத்திசாலித்தனத்தை புகுத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்திருந்தார். அதன் பிறகு காதலன், ஜீன்ஸ், பாய்ஸ், அந்நியன், இந்தியன், சிவாஜி, நண்பன் என இவரது வெற்றி படங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ஷங்கர் சில படங்களை தயாரித்திருக்கிறார்.

Also Read: கை மீறி போனதால் மகளுக்கு கடிவாளம் போட்ட ஷங்கர்.. விரக்தியில் எடுத்த அதிரடி முடிவு

மேலும் ஷங்கருக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் இப்போது கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவரது நடிப்பில் மாவீரன் படம் வெளியாகி இருந்தது. ஷங்கரின் மகனும் விரைவில் படங்களில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்த சூழலில் ஷங்கர் இன்று தன்னுடைய 60-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்த வகையில் அவருடைய சொத்து மதிப்பு வெளியாகி இருக்கிறது. சினிமாவை தவிர ஷங்கர் ரியல் எஸ்டேட் போன்றவற்றிலும் முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் ராம்சரனின் கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் கமல் நடிப்பில் லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 50 கோடி சம்பளமாக ஷங்கர் பெற்றிருக்கிறார்.

Also Read: தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த ஷங்கர்.. கேம் சேஞ்சர்னு பார்த்தால் மொத்த காசும் போயிடும் போல

அந்த வகையில் 60 வயதில் 30 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் தற்போது ஷங்கர் 150 கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். மும்பை, சென்னை போன்ற இடங்களில் பிரம்மாண்ட பங்களாவுக்கு உரிமையாளராக உள்ளார். அதுமட்டுமன்றி விலை உயர்ந்த கார்களான பிஎம்டபிள்யூ மற்றும ரோல்ஸ் ராயஸ் கோஸ்ட் கார்களை வைத்துள்ளார்.

மேலும் இப்போது தமிழ் சினிமாவை பொருத்தவரையில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஷங்கர் தான் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக தனது கனவு படமான வேள்பாரி படத்தை ஷங்கர் எடுக்க இருக்கிறார். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் ஷங்கரின் 60வது பிறந்த நாளுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Also Read: இந்தியன் 2  ரிலீஸ்க்கு முன்பே 130 கோடி கலெக்சனுக்கு ரெடியாகும் கமல்.. சங்கரை அனுப்பி வைத்துவிட்டு போட்ட பிளான்

Trending News