தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் ஷங்கரின் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அதற்கு காரணம் ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டமாக இருக்கும் அந்த படத்தில் நடித்தால் தங்களுடைய அந்தஸ்தும் ரசிகர்களிடம் வரவேற்போம் அதிகமாக இருக்கும் என்பதற்காகவே எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். மேலும் சங்கர் தன்னுடைய படத்தில் ஒவ்வொரு காட்சியும் இன்றளவும் பேசப்படும் அளவிற்கு பிரம்மாண்டமாக செட் போட்டு தன்னுடைய படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்.
ஷங்கர் கமல்ஹாசன் வைத்து இந்தியன் எனும் பிரம்மாண்ட படத்தை எடுத்திருந்தார். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும் வித்தியாசமான இடத்தில் படப்பிடிப்பு நடித்திருப்பார். மேலும் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலிலும் ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை வைத்து உருவாக்கி இருப்பார். அதுவும் கமல்ஹாசனுடன் மனிஷா கொய்ராலா காதல் செய்யும் பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கும் அந்த பாடலில் அனைத்து விதமான விலங்குகளையும் படத்தில் காட்டியிருப்பார்.
தற்போது மீண்டும் பிரம்மாண்டமாக இந்தியன் 2 படத்தை ஷங்கர் எடுத்துள்ளார். இந்த படத்தை கூடிய விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படத்தை கமல்ஹாசன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை கொடுத்தாரோ அதே போல் ரஜினிகாந்த் எந்திரன் என்ற பிரமாண்ட படத்தை கொடுத்தார்.
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான திரைப்படம் எந்திரன். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் செலவு செய்து படத்தை எடுத்தனர். இப்படத்தை பார்த்து பல இயக்குனர்களும் ஷங்கரை புகழ்ந்து தள்ளினர்.
இப்படி 2 நடிகர்களுக்கும் பிரமாண்ட படத்தை கொடுத்த ஷங்கர் விஜய்யை வைத்து எடுத்த நண்பன் படம் பிரம்மாண்ட படமாக அமையவில்லை. ஆனால் விஜய்யை வைத்து சங்கர் தன்னுடைய சொந்த கதையில் படத்தை இயக்கினால் பிரம்மாண்டமான படத்தை கொடுப்பார் என கூறி வருகின்றனர். சமீபத்தில் கூட விஜய்யை வைத்து படம் எடுக்க வாய்ப்பிருக்கிறது என ஷங்கர் கூறினார். அதனால் கூடிய விரைவில் விஜய்யை வைத்து ஒரு பிரம்மாண்டமான படத்தை கொடுப்பார் என கூறி வருகின்றனர்.