தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. பாக்கியராஜ் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக வாக்கு எண்ணிக்கை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதில் பாண்டவர்கள் அணியில் ஆன நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் இவ்வழக்கில் மேல்முறையீடு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட் தேர்தல் செல்லும் என்றும் வாக்குகள் எனவும் உத்தரவிட்டிருந்தது. அந்தத் தேர்தலில் பாண்டவர்கள் அணியான விஷால் அணி வெற்றி பெற்றது.
அப்பொழுது எண்ணும் மையத்திற்கு வந்த இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவிடம் பத்திரிக்கை நிருபர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். இந்த தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த சாந்தனு இது சினிமாக்காரர்களுக்கு மட்டும் உண்டான தேர்தல்.
இதில் மக்கள் தலையிட அவசியமில்லை. அதுமட்டுமல்லாமல் இதில் யார் ஜெயித்தால் அவர்களுக்கு என்ன என்று ஆவேசமாக கேட்டுள்ளார். இது விஷாலின் கொள்கைக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த பதிலை சாந்தனு அளித்துள்ளார்.
ஏனென்றால் இந்த தேர்தலில் ஜெயித்தால் நடிகர் சங்கம் கட்டுவதற்கு கிரிக்கெட் போட்டி நடத்தி மக்களிடம் வசூல் செய்கிறார். விஷாலின் இந்தத் திட்டத்திற்கு எதிராகவே சாந்தனு இப்படிப் பேசியுள்ளார். நடிகர் சங்கம் கட்டுவதற்கு மக்களிடம் பணம் பெறுவது தப்பு என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சாந்தனுவின் தந்தை பாக்கியராஜ் இந்தத் தேர்தலில் தோற்று விட்ட ஆவேசத்தில் கூட அப்படி பேசி இருக்கலாம். ஆனால் நடிகர் சங்கம் கட்டுவதற்காக விஷால் மற்றும் கார்த்தி இருவரும் ஒரு படத்தில் நடித்து வந்தார்கள். ஆனால் அந்தப் படத்தில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார் விஷால். எப்போதாவது நடிகர் சங்க கட்டிடத்தை விஷால் கட்டி தருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.