சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஸ்ரேயாஸ் ஐயரை மட்டும் பழிவாங்கிய பிசிசிஐ.. விராட் கோலி, கேஎல் ராகுலுக்கு காட்டும் கரிசனம்

இந்திய அணியின் தொடர் தோல்விகள் காரணமாக பிசிசிஐ பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து வீரர்களுக்கு செக் வைத்துள்ளது. இதனால் சீனியர் வீரர்கள் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். கொடுத்த முழு சுதந்திரத்தையும் பறித்துக் கொண்டது பிசிசிஐ.

இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தோல்வி அடைந்ததால் நல்ல பேட்டிங் ஃபார்மில் இல்லாத வீரர்கள் உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டுமென உத்தரவு போட்டு உள்ளது. கோலி, ராகுல், ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இதில் விளையாடி தங்களுடைய ஃபார்மை மீட்டெடுக்கும்படி உத்தரவு வந்தது.

விராட் கோலி கடந்த 2012 ஆம் ஆண்டு உள்ளூர் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடினார், அதன் பின் இன்றுவரை 14 ஆண்டுகள் ஆகியும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை. இப்பொழுதும் கூட அவர் தனக்கு கழுத்து வலி இருக்கிறது என விளையாட மறுத்து வருகிறார்.

ஒரு பக்கம் கே எல் ராகுல் தனக்கு முழங்காலில் பிரச்சனை இருப்பதாகவும் அதனால் ஓய்வு வேண்டும் என உள்ளூர் போட்டியை நிராகரித்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்டர்நேஷனல் போட்டிகளில் இவ்வாறு கூறுவதே கிடையாது. ஆனால் உள்ளூர் போட்டிகளை மறுப்பதற்கு மட்டும் காரணத்தை தூக்கி கொண்டு வருகிறார்கள்.

இவர்களைப் போல ஆறு மாதத்திற்கு முன்பு ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக உள்ளூர் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கும் நிஜமான முதுகு வலி இருந்தது. இப்படி ஐயர் விலகியதால் பிசிசிஐ நடத்தும் முதல் தர போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.

Trending News