சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

தொப்புளை சுற்றி பச்சை குத்திய ஸ்ருதிஹாசன்.. வருங்கால கணவரின் சில்மிஷம்!

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மிகத் திறமையான மற்றும் அழகான நடிகையாக வலம் வருகிறார்.

ஸ்ருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர் மும்பையை சேர்ந்த பிரபல டூடுல் கலைஞர் ஆவார். இவர்கள் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் சாந்தனு பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசன் பல சர்ச்சைகளை சந்தித்தார். அதாவது பிறந்தநாள் விழாவில் ஸ்ருதிஹாசன் கேவலமான வடிவிலான கேக்கை வெட்டி கொண்டாடினார். மேலும் முத்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இதனால் பல ரசிகர்கள் இவரை காறித் துப்பும் அளவிற்கு கமெண்டுகளை தெறிக்கவிட்டனர்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் வயிற்றில் அவருடைய காதலன் சாந்தனுவும் பச்சை குத்தியுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதில் தங்க் லைஃப் என பச்சைக் குத்தியுள்ளார்.

மேலும் என்னை வைத்து சாந்தனும் பயிற்சி எடுத்துக் கொள்கிறார் எனவும் ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டிருந்தார். இதற்காக ஸ்ருதிஹாசன் மூன்றரை மணி நேரம் செலவழித்துள்ளார். சுருதிஹாசன் படங்களில் இவ்வளவு பிஸியாக இருக்கும் போதும் தனது காதலனுக்காக இதை செய்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், கோபிசந்த் மாலினேனி இயக்கும் புதிய படத்தில் 61 வயது நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Trending News